“ஜெய்யும், நாயகியும் உண்மையிலேயே காதலித்து வாழ்ந்துள்ளார்கள்”: ’எண்ணித் துணிக’ படவிழா ஹைலைட்ஸ்!
Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது..,
“இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார். மிக நல்ல இசையை தந்துள்ளார். இந்த படத்தில் எங்களுக்கு சவாலாக இருந்தது திரைக்கதைக்கு ஏற்றவாறு படத்தை எடிட் செய்வது தான். படத்தில் நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.“
ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார் கூறியதாவது..,
“இயக்குநர் வெற்றியின் கடின உழைப்பே இந்த படம் இப்படி உருவாவதற்கு காரணம். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.“
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் கூறியதாவது..,
இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்த படம் பார்ப்பவரை சீட் நுனிக்கு கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஜெய் மற்றும் அதுல்யா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கிறது. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளது.
இயக்குனர் தமிழ் கூறியதாவது..,
“இந்த படம் பெரிய வெற்றி பெறும். என் நெருங்கிய நண்பர் வெற்றி, அவர் வெற்றியடைய எனது வாழ்த்துகள். “
இயக்குனர் விருமாண்டி கூறியதாவது..,
“படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன், படம் சிறப்பாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். நடிகர் ஜெய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். “
இயக்குனர் நெல்சன் கூறியதாவது..,
“படத்தின் டைட்டில் அழகாகவும், தமிழிலும் இருக்கிறது. நடிகர் ஜெய் எதார்த்தமான நடிகர், அவரது நடிப்பு இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். இந்த படம் வெற்றிபெறும் என உறுதியாக நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். “
நடிகை அதுல்யா கூறியதாவது..,
“இந்த படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.”
நடிகர் ஜெய் கூறியதாவது..,
“இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி.”
இயக்குனர் வெற்றி செல்வன் கூறியதாவது..,
“தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம். எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.“
நடிகர் மாரிமுத்து கூறியதாவது..,
“இந்த படத்தில் நான் ஜெய் உடைய அப்பாவாக நடித்திருக்கிறேன். இந்த படம் ஒரு பாசிடிவ் அதிர்வலையை தரும். ஒளிப்பதிவாளர் தினேஷ் இந்த படத்திற்காக கடினமான அர்பணிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம்.“
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது..,
“பெரிய போராட்டங்களை கடந்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-க்கு எனது நன்றிகள். தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. “
ஜாக்குவார் தங்கம் கூறியதாவது..,
“படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் ஜெய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். ஜெய்யும் நாயகியும் உண்மையிலேயே காதலித்து வாழ்ந்துள்ளார்கள். பார்க்க அழகாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூறியதாவது..,
“உள்ளடக்கம் சிறப்பாக உள்ள படங்களை உலகம் முழுவதும் ரசிப்பார்கள். இந்த படத்திற்காக எவ்வளவு போராடினார்கள் என எனக்கு தெரியும். படத்தில் ஜெய் பிரமாதமாக நடித்துள்ளார். இது ஒரு நேர்த்தியான திரைப்படம். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். “
மிர்ச்சி சிவா கூறியதாவது..,
”இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகப்பெரிய உயரத்தை அடைவார். அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.
இயக்குனர் வசந்த் கூறியதாவது..,
“நன்றியுணர்வு அதிகம் இருப்பவர் இயக்குனர் வெற்றி, அவர் மிகப்பெரிய வெற்றியடைவார். வெற்றியின் இந்த படத்திற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் மிகச் சிறந்த கேமராமேன், அவருடைய லைட்டிங், காம்போசிசன் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவரும் சிறந்த உழைப்பினை கொடுத்துள்ளனர். முதல் பட இயக்குனர் இயக்கும் போல் இந்த படம் இல்லை. இதை படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”
தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் கூறியதாவது.,
”இயக்குனர் வெற்றியை பார்த்தபோதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்கு தெரியும். இந்த படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப் பெரியது. அதற்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்கு பெரிய பலம். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.”
க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசியதாவது..
”இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தை தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.”
இத்திரைப்படத்தில் மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜே.பி.தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.