“நான் ஏன் ‘ஜோக்கர்’ படம் பார்க்க விரும்புகிறேன்?”
நான் பார்த்து ரசித்து வியந்த படங்கள்தான் என் கவர் ஃபோட்டோவில் இடம்பெறும் என்பது நண்பர்களுக்குத் தெரியும். அரிதினும் அரிதாக பார்க்க விழையும் படங்களையும் வைப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் #ஜோக்கர்.
#குக்கூ வெளிவருவதற்கு முன்பாகவே அது பற்றி நிறையவே நேரடியாகத் தெரியும். அப்போது எனக்கு விஷுவலைஸ் செய்ததைவிட செம்மயாக படம் வந்திருந்தது.
இதோ #Joker வெளியாகிறது. அண்ணன் Raju muruganசொன்னபடி சமகால அரசியல், சமூக அமைப்பை நோக்கிய ஓர் எளிய மனிதனின் கேள்வி என்ற அளவில் மட்டுமே இப்போதைக்குத் தெரியும். ஆனால், வழக்கமான வசனம் வழி பிரச்சார படமாக அல்லாமல், ராஜு முருகன் அவர்களின் தனித்துவத்துடன் கூடிய திரைமொழி பேசும் சுவாரசிய சினிமாவாக இருக்கும் என்பது முழு நம்பிக்கை.
இம்முறை ராஜு முருகன் என்பதற்காக மட்டுமின்றி, அவரது ப்ரொட்டாகனிஸ்ட் சோமசுந்தரம் அவர்களுக்காகவும் ஜோக்கர் மீதான விருப்பம் விண்ணை எட்டியுள்ளது. கச்சிதமாகப் பயன்படுத்தினால் தமிழ் சினிமாவுக்கு இர்பான் கான், நவாஸூதின், பிஜு, லெனா முதலானோரைவிட வேற லெவல் நடிகரை சோமசுந்தரம் மூலம் நாம் கண்டடைய முடியும்.
ப்யூர் சினிமா அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரண்ய காண்டம் பார்த்தேன். அங்கு நூற்றுக்கணக்கான தீவிர சினிமா ஆர்வலர்கள் நிரம்பி வழிந்தனர். படத்தில் சோமசுந்தரம் வரும் காட்சிகளுக்குத்தான் அதிகம் கைதட்டல். அவரது கதாபாத்திரப் படைப்பு மட்டுமின்றி, அவரது இயல்பு மீறாத நடிப்பும் அதற்கு மிக முக்கியக் காரணம். ஆரண்ய காண்டம் படத்தைவிட 5 Sundarikal படத்தில் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை புரியும் கதாபாத்திரத்தில் பின்னியெடுத்த சோமசுந்தரம்தான் எனக்கு தனிப்பட்ட முறையில் செம்ம.
அப்படிப்பட்ட மகத்தான நடிகரை தனது ப்ரொட்டாகனிஸ்ட் ஆக்கியதிலேயே ராஜு முருகன் தன் தனித்துவத்தை வெளிப்படுத்திவிட்டார்.
JokerTheMovie – நம் ராஜு முருகனை வேற லெவலுக்கு கொண்டு சேர்த்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நண்பருக்கு நண்பர் நண்பரே என்ற மியூச்சுவல் விதிப்படி, ஜோக்கர் படத்துக்கு உரிய ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
– சரா சுப்பிரமணியம்