பழங்குடி சமூகங்களுக்கு நடக்கும் துரோகங்களுக்கு முர்மு தேர்வு ஒரு ஷாக் அப்சர்வராக இருக்கும்!
எல்லா தரப்பையும் உள்ளடக்கிய, எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்கிற கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ளக்கூடிய நிர்பந்தம் அல்லது திட்டம் பாஜக.வுக்கு இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், அதன் நகர்வுகளில் கட்சியின் வளர்ச்சி, உடனடித் தேர்தல், இந்துராணுவம் , பெருநிறுவனங்களின் நலன் உள்ளிட்ட கணக்கீடுகளும் இல்லாமல் இருக்காது
ஜனாதிபதி கிழக்கு மாநிலத்திலிருந்து வரவேண்டும், பழங்குடியாக இருக்க வேண்டும் என்று அவர்களது தேசியக் குழு எடுத்த முடிவின்படியே முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கிழக்கு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கிற திட்டத்திற்கு அது ஏன் வந்தது என்பதை அறிய, கிழக்கு மாநிலங்களையும் அதன் பின்னணிகளையும் ஆராய வேண்டிய அவசியமிருக்கிறது.
கிழக்கு மாநிலங்கள் என்ற வரையறைக்குள் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா இந்த நான்கு மாநிலங்களும் வரலாம். (ஆனால் சங்கிகளின் கிழக்கில் இன்னும் ஓரிரு மாநிலங்கள் கூடுதலாக இருக்கலாம்.)
இந்த நான்கு மாநிலங்களும் வரும் காலத்தில் தேர்தலை சந்திக்க இருக்கிற மாநிலங்கள்.
பழங்குடிகள் பெரிதளவு வசிக்கிற மாநிலங்கள்.
பெரு நிறுவனங்களை எதிர்த்து பழங்குடிகளின் கிளர்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்ற மாநிலங்கள் .
பழங்குடிகளின் அமைப்புகளுக்கென்று தனித்த வரலாறு இருக்கின்ற மாநிலங்கள். மாவோ அமைப்பு வேர்கொண்டுள்ள மாநிலங்கள்.
இந்த கிழக்கு 418,323 சதுரகிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இங்கு 300 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இது இந்தியப்பரப்பில் 25 சதவீதத்துக்கும் மேலானது.
இந்தப் பகுதிகளில் வங்காளம், இந்தி மைதிலி, நேபாளி ஒடியா, உருது போன்ற மொழிகள் பேசப்படுகிறது
இந்த்துத்துவா அஜண்டா தனது எல்லையை எட்டிய மாநிலங்களில் அது நிச்சயம் சரிவுகளை நோக்கி இறங்கும். இன்னும் ஓரிரு வருடங்களில் அதிருப்தி கூடுதலாகும். இந்த சூழலில் நாளை பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் குறிப்பிட்ட கிழக்கு மாநிலங்களின் பங்கு அவசியமானது.
ஒடிசாவில் நவீன் பட்நாயக், மேற்கு வங்கத்தில் மம்தா, ஜார்கண்டில் ஹேமந்சேரன், பீகாரில் நித்தீஷ் என எதிர்கட்சிகள் கோலேச்சும் மாநிலங்களாக இருக்கிறது, அல்லது இங்கெல்லாம் இப்போதே பாஜக பலவீனமாக காணப்படுகிறது .
கோபல்பூர் ஸ்டீல் பிளாண்ட் , உட்கல டாட்டா பிளாண்ட், வேதாந்தாவின் நியாம்கிரி பிளாண்ட், போஸ்கோ நிறுவனம் ஆகியவை செயல்படும் இந்த எல்லைகளுக்குள்தான் வருகிறது. இந்நிறுவனங்களை எதிர்த்து பழங்குடிகள் இங்கெல்லாம் வீரம் செரிந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.இத்தேர்வு அவர்களை மட்டுப்படுத்தவும் போர்க்குரலை மலினப்படுத்தவும் உதவலாம்.
சங்க பரிவார் இந்தியாவை நான்கு அல்லது ஐந்து செக்மெண்டாக பிரித்து வேலை செய்கிறது. இதர தெற்கு, வடக்கு, மேற்கு மாநிலங்களுக்கு அவர்கள் பிற வாய்ப்புகளை அளித்திருக்கிறார்கள், அல்லது எதிர்கட்சிகளை ஊசலாடச்செய்து பாராளுமன்றத் தேர்தலில் அணி சேராமலிருக்க உருவாக்கப்பட்ட உத்தியாகக்கூட இதை எடுத்திருக்கலாம்,
அல்லது இது திரெளபதியின் பழைய பணிக்கான வெகுமதியாகக்கூட இருக்கலாம்.
திரௌபதி முர்மு பதவிகளில் இருந்த காலத்தில் எண்ணற்ற பழங்குடி விரோத திட்டங்களுக்கு உடந்தையாக இருந்தார்.
ஜார்கண்ட் மாநில பாஜக அரசு பழங்குடி மக்களின் நிலங்களை வளர்ச்சி என்ற பெயரில் கையகப்படுத்தலாம் என்ற சட்டத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
பெருநிறுவனங்களின் ஆலைகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இதன் வழியாகவே கையகப்படுத்திக்கொடுத்தார்கள்.
கைநீட்ட எதிர்மறையான பல சம்பவங்கள் இருந்தாலும்கூட காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளில் இப்படியான சமூகங்களிலிருந்து ஒருவரை வளர்த்தெடுத்து வாய்ப்பளிக்கவேண்டிய அவசியத்தை யோசிக்கவே இல்லை. பாஜகவின் கபடநாடகத்திற்கு எதிராக செயல்பட ஒருவரை எதிர்காலத்தில் உருவாக்கவேண்டிய அவசியத்தை இன்னும்கூட அது உணர்ந்ததுபோல் தெரியவில்லை.
வரும் தேர்தல்களில் இந்தத் தேர்வு எந்த அளவுக்கு பாஜகவுக்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் உலகநாடுகள் மத்தியில் இழந்த செல்வாக்கை ஓரளவு சரி செய்துகொள்ளவும் பழங்குடிகள் மத்தியில் தனக்கான செல்வாக்கை இன்னும் வளர்த்திக்கொள்ளவும் அவர்களை இந்துமயமாக்கவும் இந்தத்தேர்வு உதவும். கூடுதலாக பழங்குடி சமூகங்களுக்கு நடக்கும் துரோகங்களுக்கு இந்தத்தேர்வு ஒரு ஷாக் அப்சர்வராக இருக்கும்.
Lakshmanasamy Rangasamy
(Via – Anbe Selva)