என்னாச்சு மோடி உங்களுக்கு? பயமா இருக்கு எங்களுக்கு…!
என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு…!
அம்பானிக்கு சொம்படிச்சீங்க
அதானிக்கும் சொம்படிச்சீங்க
டாடா, டயருக்கு கூட பம்படிச்சீங்க
மக்களுக்கு மட்டும் ஏன் ஆப்படிசீங்க?
என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு…!
நாடு நாடா சுத்துறீங்க
மக்களை ரோட்டுல நிறுத்துறீங்க
வேளைக்கொரு ஆடை உடுத்துறீங்க
நாங்க வேலைக்கு போகாம படுத்துறீங்க…!
என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு…!
மேட்டை வெட்டி போடாம
பள்ளத்தையெல்லாம் மூடாம
பள்ளத்தை மேலும் வெட்டி வெட்டி
சவக்குழிய ஏன்யா தோண்டறீங்க?
என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு…!
வெறுப்ப உள்ள வெச்சிக்கிட்டு – எங்க
செருப்பு தேய நடக்குறோமே -நிஜ
கருப்பு பணத்தை எடுக்காம – இப்படி
பொறுப்பில்லாம இருக்கீங்களே?
என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு…!
90 சதவீத ஆதரவு
உங்களுக்கிருப்பதா சொல்றீங்களே
தில்லிருந்தா நாளைக்கே
தேர்தலை வெச்சி நில்லுங்களேன்…!
என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு…!
(Shared from Anthanan Shanmugam)