சமஸ்கிருதம் என்ன ம—ருக்கு எங்களுக்கு…?
“சமஸ்கிருத மொழியை தமிழர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.” – News 18 தொலைகாட்சி விவாதத்தில் பானு கோம்ஸ்.
ஆங்கிலம் 70 நாடுகளுக்கு மேல், பிரென்ச் 50 நாடுகளுக்கு மேல், ஜொ்மனி 25 நாடுகளுக்கு மேல், அரபு 25 நாடுகளுக்கு மேல், ஏன்… எங்கள் தாய்மொழி தங்கத்தமிழ் 4 நாடுகளில் ஆட்சிமொழி.
இந்த செத்து – இத்துப்போன சமஸ்கிருத மொழி, இந்தியாவில் ஒரேயொரு மாநிலத்தில்கூட ஆட்சி மொழி கிடையாது. அப்புறம் எதுக்கு செத்த பிணத்திற்கு சென்ட் அடித்து எழுப்பி உயிர் கொடுக்க போராடுகிறார்கள்?
தேவையிருந்தால் தான் அதற்கான அவசியம் பிறக்கும். சமஸ்கிருதத்தின் தேவை என்ன? அதில் அறிவியலுக்கு எதிரான புராண புழுகுகளும், இதிகாச குப்பைகளும், மாட்டு மூத்திரத்தில் -சாணியில் தங்கம் இருப்பதாக கற்பனையில் எழுதப்பட்ட கட்டு கதைகளும் தான் இருக்கும். வேறென்ன இருக்கிறது?
பயங்கரமான அறிவியல் இருக்கிறதாம்! மருத்துவம் இருக்கிறதாம்! இருக்கிறதென்றால், அதை ஆங்கிலத்தில், பிரெஞ்சில், தமிழில், ஏன்… உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுங்கள். உங்களிடம் – நிரூபிக்கபட்ட அறிவுபூர்வமான நல்ல சரக்கு சமஸ்கிருதத்தில் இருந்தால் உலகம் அதை ஓடோடி வந்து வரவேற்குமே! உங்கள் சமஸ்கிருத மொழி உலகம் எங்கும் தானாக ஆங்கிலம் போல பரவுமே!
சமஸ்கிருதத்தில் ஆயுர்வேத மருத்துவம் இருக்கிறதா? தமிழில் சித்த மருத்துவம் இல்லையா? எல்லா மொழிக்காரனிடமும் பாரம்பரிய மருத்துவ முறைகள் இருக்கத் தானே செய்கிறது? நல்லது எதுவானாலும் உலகம் அதை ஏற்கும். சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும். சமஸ்கிருதத்தில் சரக்கு இருக்குமாயின் என்றோ அது நிரூபிக்கப்பட்டு உலகளவில் அது பெயர் பெற்றிருக்குமே…
கல்வியானாலும், கலையானாலும், மொழியானாலும் அதை நாம் கற்று, தொடாந்து பயன்படுத்தவில்லை என்றால், நாளடைவில் அது நம்மைவிட்டு வெகுதூரம் ஓடிவிடும். ஏன்… மறந்தேகூட போகும்.
மொழி என்பது நம் எண்ணங்களை, உணர்வுகளை வெளிபடுத்தும் கருவி. எத்தனை மொழி படிக்கிறோமோ அந்த அளவு பயனுண்டு நமக்கு. ஆனால், அந்த மொழி பயன்பாட்டில் இருக்க வேண்டும்; பலருக்கு அது உதவியாக இருக்க வேண்டும்; அது உலகம் செல்ல வேண்டும்.
அன்று நாம் ஊரோடு வாழ்ந்தோம். இன்று உலகத்தோடு வாழ்கிறோம். உலகத்தோடு வாழ உலக மொழி ஆங்கிலம் வேண்டும். ஊரோடு வாழ தமிழ் வேண்டும்.
அப்புறம், செத்துப்போன சமஸ்கிருதம் என்ன ம—ருக்கு? அதன் தேவை என்ன? 3ஆம் மொழியாக அதை படிக்க வேண்டிய அவசியமென்ன?
மலையளவு தாய்மொழி தமிழால், ஆங்கிலத்தால் பலனுண்டு நமக்கு. சமஸ்கிருதத்தால் கடுகளவுகூட நமக்கு பயனில்லை.
இல்லாத கடவுளை, கல்லில் இருப்பதாகச் சொல்லி ஊரை ஏமாற்றி உலையில் போடும் பிராடு கூட்டங்களுக்கு சமஸ்கிருதம் தேவையாக இருக்கலாம். பிராடு கூட்டங்கள் படிக்கட்டும் அதை.
உண்மையாக உடலுழைத்து வாழும் மக்களுக்கு சமஸ்கிருதம் ஒரு செத்த மொழியே. அறிவு உள்ளவர்களுக்கு, எளிய மக்களுக்கு மைக்ரோ அளவுகூட சமஸ்கிருதம் பயன்படாது இங்கே.
மூன்றாம் மொழி சமஸ்கிருதம் என்ன ம—ருக்கு எங்களுக்கு???
– தமிழ் ராஜேந்திரன்