“விவேகம்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது!” – இயக்குனர் சிவா
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2017/07/0-26.jpg)
அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘விவேகம்’. இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவா இயக்குகிறார்.
சமீபத்தில் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, செர்பியாவிலிருந்து சென்னை திரும்பியது படக்குழு. ஆனால், அதிகாரபூர்வமாக முழு படப்பிடிப்பும் முடிவு பெற்றதாக படக்குழு அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அஜித்துக்கு வியாழக்கிழமை ராசியான நாள் என்பதால், நேற்று (ஜூலை 6) வியாழக்கிழமை இறுதிநாள் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி, மொத்த படப்பிடிப்பும் முடிவு பெற்றதாக, இயக்குநர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 10ஆம் தேதி ‘விவேகம்’ வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.