கிழக்கு கடற்கரை சாலையில் வில்லன்களை விரட்டி ஓடிய விஷால்!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘கத்தி சண்டை’ இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர்களுடன் சௌந்தர்ராஜா, மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா. தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் சுராஜ். இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கூறுகையில், “இந்த படத்தில் இடம்பெறும் சேஸிங் காட்சி ஒன்று சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டது. வில்லன்கள்  ஜெகபதி பாபு, தருண் அரோரா  ஆகியோரை நாயகன் விஷால் துரத்திப் பிடிக்கும் கார் சேஸிங் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் ஏழு நாட்கள் 12  கேமராக்கள் கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. பைக் சேஸிங்கில் தேர்ச்சி பெற்ற ஆறு கலைஞர்களைக்  கொண்டு திரில்லிங்காக படமாக்கினோம். விறுவிறுப்பான திரைக்கதையில் உருவான ‘கத்தி சண்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன்

இசை – ஹிப் ஹாப் தமிழா

பாடல்கள் – நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா

வசனம் – பசும்பொன் ஜோதி

எடிட்டிங் – ஆர்.கே.செல்வா

ஸ்டன்ட் – கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்

கலை – உமேஷ்குமார்

நடனம் – தினேஷ், ஷோபி

தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த்

ஊடகத்தொடர்பு – மௌனம்ரவி