முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ’விருமன்’: ஆகஸ்டு 31ஆம் தேதி ரிலீஸ்!

’குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ’மருது’, ‘கொடி வீரன்’, ‘தேவராட்டம்’, ‘புலிகுத்தி பாண்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள முத்தையா தற்போது இயக்கிவரும் படம் ‘விருமன்’. கார்த்தி நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படத்தை தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ‘காஞ்ச பூ’ என்ற பாடலின் புரமோ சில தினங்களுக்குமுன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று ‘விருமன்’ திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு நேற்று (18-05-2022) மாலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.