ரஷ்யாவில் விக்ரம்பிரபு – ஷாம்லி டூயட்!
ஜெயம் ரவி – ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால், தற்போது விக்ரம்பிரபு – ஷாம்லி நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் ‘வீரசிவாஜி’ படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இமான் இசையில், ரோகேஷ் பாடல் வரிகளில், சிம்பு பாடிய “தாறுமாறு தக்காளி சோறு என் ஆள பாரு பப்பாளி தோலு…“ என்ற பாடலின் படிப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் நடன இயக்குனர் தினேஷின் நடன அமைப்பில் படமாக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் இசை வெளீயிட்டு விழா நடைபெற உள்ளதாக பட குழுவினர் தெரிவித்தனர்
ஒளிப்பதிவு – எம்.சுகுமார்
இசை – டி.இமான்
எடிட்டிங் – ரூபன்
வசனம் – ஞானகிரி, சசி பாலா
பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்
கலை – லால்குடி இளையராஜா
நடனம் – தினேஷ்
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்
கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக்
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி