நவம்பர் 1ஆம் தேதி நடிகர் விக்ரம் மகள் திருமணம்: கருணாநிதி கலந்து கொள்கிறார்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழி. இவரது கணவர் ‘கெவின் கேர்’ குழுமத்தின் நிறுவனரான சி.கே.ரங்கநாதன். இவர்களது மகன் மனு ரஞ்சித்.

கருணாநிதியின் கொள்ளுப்பேரனான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த (2016-ம்) ஆண்டு ஜூலை 10-ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

0a1e

மனு ரஞ்சித் – அக்‌ஷிதா திருமணம், வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கருணாநிதி கலந்துகொள்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதி, சுமார் ஓராண்டுக்குப்பின் கலந்துகொள்ளும் இரண்டாவது நிகழ்ச்சி இது.

நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 19ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு திடீரென வருகை புரிந்த கருணாநிதி, முரசொலி பவளவிழா கண்காட்சியைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.