கருணாநிதி கொள்ளுப்பேரன் – நடிகர் விக்ரம் மகள் நிச்சயதார்த்தம்!
திமுக தலைவர் கருணாநிதியின் முதல் தாரத்து மகன் மு.க.முத்து. இவரது மகள் தேன்மொழி. கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியரின் மகன் மனு ரஞ்சித். அந்த வகையில் மனு ரஞ்சித் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் ஆவார்.
மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களும், திரையுலகைச் சார்ந்த சில முக்கிய பிரபலங்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.