விஜயகாந்த் முகத்தில் காரி துப்புங்கள் மக்களே…!

‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது பீ தின்னத் தான் போகும்’ என்பது பழமொழி. அதுபோல, நடிகர் விஜயகாந்தை தூக்கி எத்தனை உயரத்தில் வைத்தாலும், அவரது தரங்கெட்ட பிறவிகுணம் மாறவே மாறாது என்பதற்கு இன்றைய நிகழ்வு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
சென்னையில் இன்று (27.12.15) தேமுதிக சார்பாக நடத்தப்பட்ட ரத்த தான முகாம் நிகழ்ச்சியில், அதன் தலைவர் நடிகர் விஜயகாந்த் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியினிடையே செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்திடம், தேர்தல் கூட்டணி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காமல் மிகவும் கோபமாக, “இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்பீர்களா?” என்று செய்தியாளர்களிடம் எதிர்கேள்வியை முன்வைத்த விஜயகாந்த், தன்னுடைய நிலையை மறந்து மிகவும் கீழ்த்தரமாக, செய்தியாளர்களை நோக்கி காரித் துப்பியுள்ளார்.
விஜயகாந்த், தன்னுடைய கட்சி நிர்வாகிகளை பொது இடத்தில் வைத்து அடித்த நிகழ்வுகளை நாம் அறிவோம். அதேபோல், செய்தியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே விஜயகாந்தின் நடவடிக்கைகளை கண்டித்து அவரை எச்சரிக்கும் வகையில் செய்தியாளர் அமைப்புகள் பலமுறை கண்டன அறிக்கைகளை வெளியிட்டதுடன், விஜயகாந்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளன. இருந்தபோதும், செய்தியாளர்களை கிள்ளுக்கீரையைப் போல் நடத்தும் கீழ்த்தரமான நடவடிக்கையை விஜயகாந்த் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது இன்று நடந்த நிகழ்வின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஜெயலலிதாவை செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி கேட்பதில்லை என்ற எண்ணம் விஜயகாந்துக்கு இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியாக தன்னை பாவித்துக்கொண்டு உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதா, செய்தியாளர்களைச் சந்திப்பதே இல்லை. அதனால் தான் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தன்னிடம் செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு, “இதை ஜெயலலிதாகிட்ட போய் கேளுங்க. போயஸ் கார்டனுக்கு போங்க. இல்லேனா, கொடநாடு எஸ்டேட்டுக்குப் போங்க. இல்லேனா, அந்த அம்மையார் ஹெலிகாப்டரில் போகும்போது துரத்திப்போய் கேளுங்க” என்று நக்கலாக பதில் அளித்தார்.
தன் கட்சியை தேர்ந்தெடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய அப்பாவி மக்கள் மழை-வெள்ளத்தில் சிக்கிச் சீரழிந்து, வாழ்வா சாவா என போராடிக்கொண்டிருந்தபோது, அந்த மக்களையே சந்திக்க முன்வராத ஜெயலலிதா, செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்துவருவதில் ஆச்சரியம் இல்லை. தமிழக அரசியலில் ஜனநாயகப் பண்புகள் வளர்க்கப்பட வேண்டுமானால், அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய முதல் நபர் – எதேச்சாதிகாரி ஜெயலலிதா; இரண்டாவது நபர் – பொது இடங்களில் தெருப்பொறுக்கி போல் நடந்துகொள்ளும் விஜயகாந்த் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஜெயலலிதாவை செய்தியாளர்கள் கேள்வி கேட்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்த ஜெயலலிதாவை தமிழக சட்டப்பேரவையில் நேருக்கு நேர் சந்தித்து கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பவர் விஜயகாந்த். ஜெயலலிதா ஆட்சி சரியான பாதையில் செல்லாதபோது, அதை தட்டிக்கேட்கும் கடமையை தமிழக வாக்காளர்கள் விஜயகாந்துக்கு கொடுத்திருக்கிறார்கள். கேபினட் அந்தஸ்தில் எதிர்க்கட்சித் தலைவராக சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்துவரும் விஜயகாந்த், மக்கள் தனக்கு கொடுத்த கடமையை ஒழுங்காகச் செய்கிறாரா? சட்டப்பேரவைக்கு தவறாமல் போகிறாரா? அங்கு ஜெயலலிதாவை நேருக்கு நேர் சந்தித்து, அவரது ஆட்சியின் நூற்றுக்கணக்கான மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்கிறாரா? இல்லையே!
ஜெயலலிதாவை சந்தித்து கேள்வி கேட்க திராணி இல்லாதவர்கள் மீது காரி உமிழ்வது சரியென்றால், முதலில் விஜயகாந்த் முகத்தில் தான் காரித் துப்ப வேண்டும்.
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறுவடை செய்யும் ஆசையில் ஊர் ஊராக வலம் வரவிருக்கும் விஜயகாந்த் முகத்தில் காரித் துப்புங்கள் மக்களே!
எதேச்சாதிகாரி ஜெயலலிதாவையும், சண்டியர் விஜயகாந்தையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி, தமிழகத்தில் ஜனநாயகப் பண்புகள் வளர வழிவகை செய்யுங்கள்…!
– அமரகீதன்