“விஜய் ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களே?” – விஜயகாந்த் பதில்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஞாயிறு தோறும் @iVijayakant என்ற ட்விட்டர் முகவரியில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதன்படி இன்று காலை 11:00 முதல் 12:00 மணி வரை ட்விட்டர் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் விஜயகாந்த். அவற்றில் சில:

தமிழகத்தின் முதல்வராக ஆசைப்படும் தங்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலாக விசேஷ தகுதிகள் என்னென்ன இருக்கின்றன?

மக்களுக்கு நல்லது செய்கின்ற தகுதி உள்ளது.

நீங்கள் முதல்வராகி விட்டால் பாரபட்சமாக செயல்படும் தொலைக்காட்சி நிறுவனங்களை என்ன செய்வீர்கள்?

அவர்கள் மாறி விடுவார்கள்.

தனியாகத்தான் நிற்பேன்”எனக் கூறிவிட்டு கூட்டணி வைத்தது ஏன்? கட்சிக்காரர்கள் பணத்தை திரும்பவும் கேட்டதால் தானே?

மக்களுக்காக, தொண்டர்களுக்காக.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உங்களது கட்சிக்கு மக்களிடையே எந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது?

நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

உளுந்தூர்பேட்டையில் உங்களுக்கு வைப்புத்தொகை (டெபாசிட்) கூட கிடைக்காதுன்னு ராமதாஸ் சொல்லியிருக்காரே கேப்டன்…

அப்படியா..

நீங்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் இதேபோல் சமூக வலைத்தளத்தில் உரையாடுவீர்களா?

ஆம்.

கருத்துக்கணிப்பில் திமுக வெற்றி பெறும் என்று கூறி இருப்பது பற்றி உங்கள் கருத்து?

அதிமுக சார்பாக ஒரு கருத்துக் கணிப்பு; திமுக சார்பாக ஒரு கருத்துக் கணிப்பு. புரிந்துகொள்ளுங்கள்.

பொதுக்கூட்டங்களில் ஸ்கூல் வாத்தியார் அவதாரம் எடுப்பது ஏன்?

மக்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனை பேர் கொண்ட குழு வைச்சுருக்கீங்க கேப்டன்?

நானேதான் பதில் சொல்கிறேன்.

அதிமுகவை சேர்ந்த சிறிய நடிகர்கள் உங்களை மிகவும் மோசமாக பேசி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு உங்கள் பதிலடி கேப்டன்?

அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

நீங்கள் முதல்வரானால் ஜெயலலிதா, திமுக செய்த ஊழல்களை தைரியமாக வெளிக்கொண்டு வருவீர்களா?

நிச்சயமாக கொண்டு வருவேன்.

கேப்டன், நீங்க முதல்வர் ஆனா இலவசம் குடுத்து மக்களை சோம்பேறி ஆக்குவீங்களா? இல்ல, வேலைவாய்ப்பு கொடுத்து மக்களை தூக்குவீங்களா?

வேலை வாய்ப்பு தந்து மக்களை உயர்த்துவேன்.

சேதுசமுத்திரம் திட்டம் குறித்து..

அது ஒரு நல்ல திட்டம்.

நீங்க முதலமைச்சர் ஆனா அரசியல் பழிவாங்குதல் இருக்குமா?

இருக்காது.

தேர்தலில் வெற்றி பெற்றால், மதுவிலக்கை எவ்வளவு விரைவாக சாத்தியமாக்குவீர்கள் .

விரைவாக நிறைவேற்றுவேன்.

நீங்க ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?

தூங்கற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

இந்த கூட்டணியை பற்றி ரொம்ப நாள் முன்னாடியே முடிவெடுத்தாச்சா?

மார்ச் 23.

இந்த தேர்தலை வைத்து ஒரு வசனம் சொல்லுங்கள் கேப்டன்

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

ஜெயிச்சதும் ஊழல் அரசியல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். செய்வீர்களா…?

செய்வேன்.

கட்சிக்காரர்களிடம் காட்டும் கோபம் ஊழல்வாதி மீது காட்டுவீர்களா?

கட்சிக்காரர்களிடம் காட்டும் கோபம் வேறு. ஊழல்வாதியிடம் காட்டும் கோபம் வேறு.

நடிகர் விஜய் ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களே? உங்கள் கருத்து?

எனக்குத் தெரியாது.

உங்களுக்கு கருத்துகணிப்பு மேல் நம்பிக்கை இருக்கிறதா?

கருத்துகணிப்பு மேல் நம்பிக்கை இல்லை.

கேப்டன் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதியை ஒழிக்கும் தைரியம் இருக்கிறதா?

நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன்.

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து?

வளர்ச்சிதான் முக்கியம். இலவசங்கள் அல்ல.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?

அது என்னுடைய இஷ்டம்.

உங்க கூட திருமா கூட்டணி வைக்குறதுக்கு முன்னாடி உங்களையே ஏளனமா பேசினார்னு எல்லாருக்கும் தெரியும். அத அவர் கிட்ட கேட்டீங்களா?

அதற்கு அவரே பதிலளித்தார்.

உங்கள் அரசியல் முன்னோடி யார்?

எம்.ஜி.ஆர்

கூட்டணி ஆட்சி கண்டிப்பாக உறுதி தானே கேப்டன்? அதுபோல் மக்கள் குறைகளைக் கூற ஒரு டோல் ப்ரி நம்பர் அவசியம். அதை செய்வீர்களா?

ஆமாம். பரிசீலனை செய்வோம்.

வெற்றி பெற்ற பிறகு வழக்கம் போல் உங்களது MLA க்கள் மீண்டும் கட்சி தாவலில் ஈடுபட்டால் என்ன செய்வது?

நான் கவலைப்படுவதில்லை.

திமுக, அதிமுக கட்சிகளின் பெரும் பண பலத்தை தங்கள் கூட்டணியால் எதிர்கொள்ள முடிகிறதா?

எங்கள் தொண்டர்களிடம் நல்ல மன பலம் உள்ளது.

இம்முறை அதிமுக ஜெயிக்குமா?

கண்டிப்பாக ஜெயிக்காது.

தங்கள் சொந்த தொகுதியான மதுரையில் போட்டியிடாமல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடுவது ஏன்?

எல்லா தொகுதியும் என் தொகுதிதான்.

எங்களின் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உங்கள் திட்டம் என்ன?

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.

இக்கால இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை…

நல்ல ஆட்சி கொண்டு வருவது உங்கள் கையில் உள்ளது.

உங்களின் இந்த முயற்சி (இணைய வழி) வெற்றி அளிக்குமா? உங்கள் கருத்து..?

நிச்சயமாக.

அதிமுக, திமுக உதவி இருந்தால் தான் சில திட்டங்கள நிறைவேற்ற முடியும்னு ஒரு சூழ்நிலை வந்தால், மக்களுக்காக அவங்ககிட்ட உதவி கேட்பீர்களா?

நாங்கள் தான் ஜெயிப்போம். உதவி தேவைப்படாது.

நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் லஞ்சம் வாங்கு அதிகாரிகள் பதவிகளை பறிப்பீர்களா?

இல்லை. திருத்துவேன்.

கேப்டன் please மற்ற அரசியல்வாதிகளை போல் பொய் சொல்ல கற்றுகொள்ளுங்கள்.

முடியாது.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்காக என்ன நல்ல திட்டம் வெச்சிருக்கீங்க? ஏழைகளையும் குடிசைகளையும் உங்களால மாத்தமுடியுமா?

வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். ஏழைகளையும் குடிசைகளையும் மாற்ற முடியும்,

தமிழக அரசியலிலில் முதலில் எதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

லஞ்சம் ஊழல்!