விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’: அதிகாரபூர்வ அறிவிப்பு
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2021/06/0a1b-1.jpg)
விஜய் தனது 65-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்புதிய படத்துக்கு ‘பீஸ்ட்’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், விடிவி.கணேஷ் மற்றும் பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.