“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்!” – விஜய்

“அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார்” என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் நாள், ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்