கதையின் நாயகனாக விதார்த் நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.
தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்..
எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை,திரைக்கதை,வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷும் இசை ஜிப்ரானும்,நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும்,சண்டைக்காட்சியை தினேஷ் சுப்புராயனும் அமைக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.,என்றும் அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.