மெத்த படிச்ச முடிச்சவிக்கிகளும், அரசியல் முடிச்சவிக்கிகளும்!
கேட்டான் பார் ஒரு கேள்வி..!
கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி,
கில்லெட் ரேசரில் சவரம் செய்து,
ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும், லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து,
ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு,
ஜாக்கி ஜட்டியையும், க்ரூசோ பனியனையும், பீட்டர் இங்லெண்ட் சட்டையையும், ஆக்சம்பர்க் பேண்ட்டையும் போட்டுக்கொண்டு,
மேகி நூடுல்சை சாப்பிட்டு, நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,
சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ரேபான் கண்ணாடியையை அணிந்து,
வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு, சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி,
மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு,
மாலை வீடு திரும்பும்போது, மனைவிக்கு கேஎப்சி பர்கரும், குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு,
நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்:
“இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சி?”ன்னு…….!!!
விஜயன் சி
# # # # # #
ROJA PRIYAN: இந்திய பொருட்களை வாங்க மக்கள் தயார் தான். ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவை திறந்து வச்சிட்டு, நம்ம ஊர் ஐஸ்வர்யாவையும், சல்மான் கான் சாருக்கானையும் நடிக்க வச்சு, உலக அழகி பட்டம் கொடுத்து… ஆத்தாடி… கொஞ்சம் இருங்க… மூச்சு விட்டுக்குறேன்…
இவ்வளவும் செஞ்சுபுட்டு, நம்ம நாட்டு பொருட்களை வாங்கலன்னு குறை சொல்வது என்ன நியாயம்?
நிலக்கடலை சாப்பிட்டா நல்லதுன்னு அந்த காலத்துல சொன்னாங்க. இப்போ, டாக்டர்களை கையில் வைத்துக்கொண்டு, “ஆயில் அதிகம்; சாப்பிடாதீங்க. கடலையில் கொழுப்பு அதிகம் உள்ளது”ன்னு சொல்ல வச்சு,.நம்ம நாட்டு நிலக்கடலைகளை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செஞ்சிகிட்டு, சினிக்கர் சாக்லேட் தயார் செய்து, அதையும் நம்ம தலையிலதான் கொட்றாங்க.
நிலக்கடலைக்குப் பதிலா சத்து குறைந்த பாத பருப்பை சாப்பிடச் சொல்லி, அவங்க வருமானத்தை இரட்டையா பெருக்கிட்டாங்க.
நெல்லிக்காய் அருமையான கால்ஷியம் நிறைந்த உணவு. என்னாச்சு…? அதைவிட சத்து அதிகம்னு பொய் சொல்லி, கிவி பழத்தை இறக்குமதி செய்ய வச்சாங்க. ஆனா நெல்லிக்காய்ல மருந்து தயார் செய்றாங்க.
நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணை, விளக்கெண்ணை இதெல்லாம் அன்றாடம் நாம் உபயோகித்தது. இப்ப அதெல்லாம் போயிடுச்சு. பாமாயில் இறக்குமதி செய்றாங்க அதோட மாரடைப்பு நோயையும் வாங்கிகிட்டோம்.
தேங்காய் கொழுப்புன்னு டாக்டர்கள சொல்ல வச்சு, அதையும் இறக்குமதி செஞ்சு, பெள்ண்ட்டி சாக்லெட் தயார் செஞ்சு நம்ம தலையில வக்கிறாங்க.
இதையெல்லாம் செய்யிற அயோக்கிய கும்பல்கள் ரொம்ப பெரிசு.
டாக்டர்களுக்கு பணத்தைக் கொடுத்து, “இத சாப்பிடாத, அத சாப்பிடாத”ன்னு ஆரம்பிச்சு, “அதற்கு மாற்றமான பொருட்கள் எங்ககிட்ட இருக்கு”ன்னு அரசியல்வாதிகளுக்கு காச குடுத்து, அவன் நாட்டு சந்தையை நம்ம நாட்ல நுழைச்சிட்டான்.
நம்ம நாட்டு வணிகன் பிச்சை எடுக்குறான்.
இதற்கெல்லாம் நீங்க பதிவா போட்ருக்கீங்களே… அந்த சாமானிய மனுஷன் காரணம் இல்லீங்க. மெத்த படிச்ச முடிச்சவிக்கி கும்பல்களும்,அரசியல் முடிச்சவிக்கிங்களும்தான்.
# # # # # #