ஒரு முக்கியமான படத்தை வழங்கி வெற்றி பெற்றிருக்கிறார் த.செ.ஞானவேல்!

ரஜினிகாந்த்தை ஸ்டாராகவும் நடிகராகவும் ஒரு சேர இயக்குமளவுக்கு திறனும் அறிவும் கொண்டவர்கள் சில பேர்தான் உண்டு. கூடுதலாக சமூக சிந்தனையும் வாய்த்தவர்கள் மிக மிக குறைவு. பா.ரஞ்சித் அத்தகையர். தற்போது த.செ.ஞானவேலும் அந்த இடத்தை பெற்றிருக்கிறார்.

வேட்டையன் படம் முக்கியமான விஷயங்களை வணிக சினிமா சட்டகத்துக்குள் வைத்து பேசுகிறது. இந்த புள்ளியில் தங்களின் அரசியலை பேசும் உத்தி தெரிந்தவர்களாக இதுவரை மணிரத்னம், ஷங்கர் போன்றோர்தான் இருந்திருக்கின்றனர். முதன்முறையாக நமக்கான அரசியலையும் அச்சட்டகங்களுக்குள் பேசும் இயக்குநர்களை பெற்று வருகிறோம்.

ரஜினி ரசிகர்களுக்கும் மற்றும் நல்ல அரசியல் செறிவு படங்களை விரும்புபவர்கள் என இரு தரப்பும் ரசிக்கும்படியான ஒரு முக்கியமான படத்தை வழங்கி வெற்றி பெற்றிருக்கிறார் த.செ.ஞானவேல்.

வாழ்த்துகள் Gnana Vel.

-RAJASANGEETHAN