விவசாய கடனை ரத்து செய்வது ஃபேஷன் ஆகி விட்டதாம்! வெங்கய்யா செப்புகிறார்!!
வறட்சி காரணமாகவும், மத்திய ஆரியத்துவ மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவும் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்களது விவசாய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று இரக்கமற்ற மத்திய அரசு பிடிவாதமாய் கூறிவிட்டது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று ரூ.8,165 கோடி அளவிலான பயிர்க்கடனை விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்து அறிவித்தார். இதன் மூலம் உத்தரபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிராவை அடுத்து விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த 4-வது மாநிலம் ஆகியுள்ளது கர்நாடகா.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “இப்போதெல்லாம் கடன் தள்ளுபடி என்பது ஃபாஷன் ஆகி விட்டது” என்றார். “தற்போதைய அமைப்பையும் விவசாயிகளையும் தக்கவைக்க இது அவசியம் என்று கருதப்படுகிறது. ஆனால், கடன்கள் மிகவும் முடியாத பட்சத்தில் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இது இறுதித் தீர்வு அல்ல” என்றார் வெங்கய்யா நாயுடு.