”ஓ.டி.டி-யின் தனித்துவத்தை மிக சரியாக புரிந்து கொண்டது மலையாள சினிமா!” – இயக்குனர் வசந்த பாலன்
கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம்…வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை home திரைப்படம் உணர்த்துகிறது.
இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதிஉன்னதத்தை ஹோம் பேசுகிறது.
ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது. நன்றி #home.
மலையாள சினிமா Ott யின் தன்மையை, தனித்துவத்தை மிக சரியாக புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது.
தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதையாசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை அனுபவிக்கிறோம்.
வசந்த பாலன், திரைப்பட இயக்குனர்