‘யு’ சான்றிதழுக்காக ‘மேல் நாட்டு மருமகன்’ முத்தக்காட்சி… போச்சு…!

உதயா கிரியேஷன் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன்’. இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடித்துள்ளார். பிரான்ஸை சேர்ந்த ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கியுள்ளார் எம்.எஸ்.எஸ். படம் பற்றி இவர் கூறுகையில், “ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.
படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிந்துவிட்டது. சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டோம். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ஒரு வசனத்தையும், நாயகன் – நாயகியின் முத்தக்காட்சியையும் நீக்கினால் தான் ‘யு’ சான்றிதழ் கொடுப்போம் என்று கூறினார்கள்.
நானும் முத்தக்காட்சியை நீக்குகிறேன் என்று கூறிவிட்டேன். அந்த வசனத்தை நீக்கி வேறொரு வசனத்தை குறிப்பிட்டேன் அதற்கு அவர்கள் நன்றாக இருக்கிறது அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, படம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி ‘யு’ சான்றிதழ் வழங்கினார்கள்.
நம் நாட்டு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சொல்லவரும் இந்த ‘மேல் நாட்டு மருமகன்’ விரைவில் திரைக்கு வருகிறான் என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.
ஒளிப்பதிவு – கே.கெளதம் கிருஷ்ணா
இசை – வே.கிஷோர் குமார்
படத்தொகுப்பு – விஜய் கீர்த்தி
கலை – ராம்
நடனம் – சங்கர்
பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்.
தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த்
ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி