விஜய் ஒரு ‘பப்பட்’; டெல்லியை எதிர்க்க துணிவில்லை!

விஜய் ஒரு பப்பட் என்பது சிறுக சிறுக அம்பலப்பட்டு வருகிறது,
வடக்கு எதிர்ப்பு என்பது இந்த நிலத்தின் அரசியல் உணர்வு, அது இன்றைக்கு உருவானது அல்ல, இது பற்றி தொ.ப எழுதி இருப்பார். மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தமிழ் நிலத்திற்கு எதிரி என்பது வடக்கில் இருந்து தான் வர முடியும், அதனால்தான் தமிழ்நாட்டு கிராமங்களில் வடக்கு எல்லையில் வடக்கு வாசல் அம்மன் கோவில்களை காண முடியும்.. வடக்கிலிருந்து வந்தவர்கள் இந்த மொழிக்கும் நிலத்திற்கும் ஊறு விளைவித்திருக்கிறார்கள், அதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வழியாக வந்த ரோமானியர்களோடு கூட இணக்கமாக இருந்தவர்கள், வடக்கில் இருந்து வந்த ஒவ்வொருவரையும் எதிர்த்து வந்திருக்கிறார்கள், தங்கள் காவல் தெய்வங்களை ஊரின் வடக்கு எல்லையில் நிறுத்திக்கொள்வது அவர்களின் நம்பிக்கை..
சமஸ்கிருதம், பார்ப்பனியம், ஹிந்தி எதிர்ப்பு என்று இந்த வடக்கு எதிர்ப்பு உணர்வை சரியாக கையாண்டதே திராவிட இயக்கத்தின் வெற்றி, அந்த உணர்வுக்கு தீனி போடத் தெரியாதவர்கள் எல்லாம் இங்கே தோற்று ஓடி இருக்கிறார்கள்,
எனவே உப்பு சப்பு இல்லாத சினிமா வசனங்களுக்கு தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.. டெல்லி கிட்ட பம்முகிறார், டெல்லியை எதிர்க்க துணிவில்லை.
இந்த சந்தேகம் இனி மக்களிடம் வலுப்பெறும்.. உண்மையில் விஜயின் அரசியல் எதிரி அதுதான்.
-ANBE SELVA