சசிகலா தலைமையில் டிடிவி.தினகரன் மகள் திருமணம்: நடிகர் பிரபு நேரில் வாழ்த்து!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (16-09-2021) காலை திருமணம் நடைபெற்றது.
இன்று காலை 7.45 மணிக்கு மணமேடைக்கு வந்தார் மணமகன். அவரைத் தொடர்ந்து மண்டபத்திற்கு வந்த சசிகலாவும், இளவரசியும் மேடையின் தனி இருக்கைகளில் அமர்ந்தனர்.
வேலூர் பொற்கோவில் தலைவர் ரமணியம்மா தாலியை ஆசீர்வதித்து எடுத்துக்கொடுக்க, சசிகலா முன்னிலையில் 9.25 மணிக்கு திருமணம் நடைபெற்றது.
சுதாகரன் – சந்தானலட்சுமி திருமணவழி உறவினர்கள் என்ற வகையில் நடிகர் பிரபுவும், அவரது சகோதரர் ராம்குமாரும் நேரில் வந்து மணமக்கள் ஜெயஹரிணி – ராமநாதன் துளசி வாண்டையாரை வாழ்த்தினார்கள்.