1942-ல் போராடியதறகாக காந்தியை இன்று கைது செய்ய துரத்தும் தமிழக போலீஸ்…!

காந்தி பதறி ஓடுகிறார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. நடுநடுங்கும் கால்களுடன்  அவர் ஓடுவது சிரிப்பை வரவழைத்தாலும், இரக்கத்தையும் ஏற்படுத்தியதால அவரை பிடித்து நிறுத்தி கேட்டோம்.

“ஏன் காந்தி என்னாச்சு… எங்கே ஓடுறீங்க…!”

“கைது பண்ண வாராங்க…”

“கைதா… உங்களையா?”

“அட ஆமாப்பா!”

“மூளை கீளை கழண்டுடுச்சா… பிரிட்டிஷ்காரன் போய் ரொம்ப காலம் ஆயிடுச்சு.. இப்ப நடக்குறது.. மக்கள் ஆட்சி. ஜனநாயகம்..!”

“உனக்குத் தான் மூளை கழண்டுடுச்சு… இப்போ என்ன விட்டு தொலைறியா, இல்லையா?”

“யோவ்… எதுக்குய்யா இப்படி லூசு மாதிரி ஓடுற?. வயசான காலத்துல எங்குட்டாவது விழுந்து பல்ல பேத்துக்கப் போற. யாரு உன்ன அரஸ்ட் பண்ண வாரா… சொல்லு?”

“போலீஸ் தான்யா!”

“என்னய்யா உளர்ற… உன்ன எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்.. நீ நல்லது தான பண்ணே. இந்தியாவுக்கு தான் சுதந்திரம் கெடச்சிடுச்சே?”

“யோவ்… 1942-ல போராடுனதுக்கு அரஸ்ட் பண்ண வர்றாங்கய்யா!”

“என்னது… 1942-ல நடந்த போராட்டத்துக்கு அரெஸ்ட்டா…. எந்த லூசுப்பயயா 1942 போராட்டத்துக்கு அரெஸ்ட் பண்ணுவான்?”

“அட வாரது தமிழ்நாடு போலிஸுப்பா!”

“அய்யய்யோ… தமிழநாடு போலீஸா… அப்போ பண்ணுவாய்ங்க!”

– என நாங்களும் சேர்ந்து ஓடினோம்.

RAJASANGEETHAN JOHN