தமிழக ஊடகத் துறையை ஆக்கிரமிக்கும் காவி தீவிரவாதம்
ஊடகத்துறையில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை மட்டுமே வெளியிட வேண்டுமென்று சமீபகாலமாக தமிழகத்தில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அதனை சரிவர செய்யாதவர்களை வேலையை விட்டு நீக்குவதாகவும் செய்திகள் வருகின்றன.
kanniyari //காஞ்சிபுரம் அத்திமரச்சிலை போல் பேஸ்புக்கில் படம் போட்டதற்காக விகடன் ஊழியர், காவித்தீவிரவாதிகளின் அழுத்தம் காரணமாக விகடன் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுப. வீரபாண்டியன் நேர்காணல் பிரச்சனையில் காவித்தீவிரவாதிகள் பிரச்சனை செய்ததால், காவேரி டிவியின் செய்தி ஆசிரியர் ஜென்ராம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசிக தலைவர் திருமாவிற்கு வாழ்த்து தெரிவித்த காரணத்திற்காக மக்கள் தொலைக்காட்சி செய்தி தயாரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். //
தமிழகம் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் இது தான் நிலைமை. ஏனென்றால் இந்தியா முழுவதும் ஊடகத்துறையில் உயர் பொறுப்புகளில் கோலோச்சுவது பார்ப்பனர்களே.. 05.06.2006இல் centre for the Study of Developing Societies (CSDS) என்ற டில்லியை சேர்ந்த நிறுவனம் பேராசியர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஒரு ஆய்வை நடத்தியது அதில் ஊடகத்துறையில்
பார்ப்பனர்கள் : 88%
OBC : 4%
SC/ST : 0%
Muslims : 3%
Cristians : 2.3%
இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் அரசு நிர்வாகம், நீதித்துறை , வங்கித்துறை என அனைத்திலும் இந்த காலத்திலும் பார்ப்பனர்களே கோலோச்சுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க மேலும் அவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற இடங்களையும் பிடுங்கி 100% பார்ப்பனர்களை நிரப்புவதற்காகத் தான். இதுதான் பிஜேபி அரசின் நோக்கம்.
அதனால் தான் சுயமரியாதை உள்ளவர்கள் இந்த 10% இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.
Kondal samy
May17 Movement