தமிழக அரசின் அவசர சட்டமும், ‘கரகாட்டக்காரன்’ பட வாழைப்பழ காமெடியும்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை, ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடி ஸ்டைலில் கலாய்க்கும் காமெடி தற்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது:-

“நாங்க உங்ககிட்ட என்ன வாங்கிட்டு வர சொன்னோம்…:?”

“அனுமதி வாங்கிட்டு வர சொன்னீங்க..:!”

“எதுக்கு அனுமதி…:?”

“ஜல்லிக்கட்டுக்கு அனுமதி…:!”

“மோடிகிட்ட கேட்டீங்களா…:?”

“கேட்டேனே…:!”

“அவரு கொடுத்தாரா…:?”

“கொடுத்தாரு…:!”

“நீங்க வாங்கிட்டு வந்த அவசர சட்டம் இங்க இருக்கு… நாங்க கேட்ட நிரந்தர சட்டம் எங்க…?”

“அட, அதாங்க இது…!”

(மறுபடியும் மொதல்ல இருந்து).