தமிழக சட்டப்பேரவை: 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்!
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத்தேர்தல் நட்த்தப்பட உள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு சென்னையில் கூறியதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளின் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் அதன்பிறகே நடைபெறும்.
மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.