‘தோழர்’ என்பதை அவதூறு செய்த கோவை கமிஷனர் அமல்ராஜ் தான்; சைலேந்திர பாபு அல்ல!

“தோழர் என்று அழைப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்” என்ற செய்தி வெளியானதும், பலர் சைலேந்திர பாபு தான் அந்த கோவை கமிஷனர் என தவறுதலாக நினைத்துக் கொண்டு, அவருக்கு பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில் அந்த கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் என்பவர் தான்; சைலேந்திர பாபு அல்ல.

“தோழர்” பற்றிய சர்ச்சைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை சைலேந்திர பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். “இது ஒரு பொய்யான செய்தி. தோழர் என்ற வார்த்தையில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. தமிழ்வழி கல்வி பயின்ற எனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும்” என்று விளக்கம் அளித்துள்ளார் சைலேந்திர பாபு.

0a