தி லயன் கிங் – விமர்சனம்

‘தி லயன் கிங்’ தமிழ் டப்பிங் செமயா இருக்கு. பெர்சனலா ஆங்கில வெர்ஷன விட தமிழ் வெர்ஷன ரொம்ப ரசிச்சு பாத்தேன். வசனங்கள், மாடுலேஷன், டப்பிங்க்கு தேர்ந்தெடுத்த நடிகர்கள்னு செம பெர்ஃபெக்ட்.

அரவிந்த் சாமி குரலும் மனோபாலா குரலும் தாறுமாறான Sync. Of course ரோபோ சங்கர் & சிங்கம் புலி காம்பினேஷனும். பட் பெர்சனலா எனக்கு ரொம்ப புடிச்சது மனோபாலா தான். செம பெர்ஃபார்மன்ஸ்.

வீட்ல குழந்தைங்க இருந்தா யோசிக்காம ஒடனே கூட்டிட்டு போயிருங்க. செமயா என்ஜாய் பண்ணுவாங்க. 3டி கண்ணாடி மாட்டிட்டு பாக்குற அளவுக்கான குழந்தைங்கன்னா 3டி லபோறது பெஸ்ட். 2டி ல, முழு ஸ்க்ரீன்ல படம் வரல. ரெண்டு சைட்லயும் கொஞ்சம் ப்ளாக் ஸ்க்ரீனோட முக்காவாசி தான் வருது. அது அந்த முழு அனுபவத்த தரல.

அதே பழைய லயன் கிங் தான். ஆனா படம் டெக்னிக்கலா மலைக்க வைக்குது. நிஜமான மிருகங்கள வச்சு ஷுட் பண்ணிருக்காங்களா இல்ல சி.ஜி யான்னு சுத்தமா வித்தியாசம் தெரியாத அளவுக்கான தரமான சம்பவம். முஃபாசாவோட மரணம் வரைக்கும் விறுவிறுன்னு போற படம் அதுக்கப்பறம் கொஞ்சம் அப்டி இப்டின்னு தான் போகுது. கடைசி 20 நிமிசம்லாம் அப்டியே நம்ம தமிழ் மசாலா படம் தான். உண்மை தெரிஞ்ச ஹீரோ நேரா வந்து வில்லன ஈசியா கொன்னு மக்கள காப்பாத்தற டைப்.

ஆனா நிச்சயம் ஒரு அருமையான அனுபவம் உறுதி. மிஸ் பண்ணாம பாருங்க!

JEYACHANDRA HASHMI