“எல்லோரும் இறந்ததும் ஆஸ்பத்திரியை இடித்து அதையும் புதைத்தனர்…”

நாங்கள் புதிதாக கல்யாணமானவர்கள். கடைக்கு போனாலும், கைகளை இறுக பிடித்துக்கொண்டு நடந்தோம். அவர் பணியாற்றும் தீயணைக்கும் நிலையத்தின் தங்குமிடத்தில் நாங்கள் வாழ்ந்தோம். மொத்தம் மூன்று இளம் ஜோடிகள். நாங்கள் அனைவரும் ஒரு சமையலறை பகிர்ந்து வந்தோம். தரைத்தளத்தில் அவர்கள் லாரிகள், சிவப்பு தீ வாகனங்கள் வைத்திருந்தனர். அது அவருடைய வேலை.

இடம் செர்நோபில் அணுமின் நிலையம். 26-ஏப்ரல்-1986.

ஒரு இரவு ஒரு பெருத்த சத்தம் கேட்டேன். ஜன்னலைத் திறந்து பார்த்தேன். அவர் என்னைக் கண்டார். “சாளரத்தை மூடு எல்லோரும் மீண்டும் தூங்க செல்லுங்கள்.. அணு உலையில் தீ பிடித்து உள்ளது நான் விரைவில் திரும்பி வருகிறேன்” என்றார்.

நான் வெடிப்பை பார்க்கவில்லை. வெறும் தீப்பிழம்புகள் தெரிந்தன. முழு வானமும் பிரகாசமாக இருந்தது. மோசமான நெருப்பு, புகை. வெப்பம்….. அவர் இன்னும் திரும்பி வரவில்லை.

காலையில் ஏழு மணிக்கு அவர் மருத்துவமனையில் உள்ளார் என்று எனக்கு தகவல் வந்தது. நான் அங்கு ஓடினேன் ஆனால் போலீஸ் ஏற்கனவே அதை சுற்றி வளைத்து விட்டது, அவர்கள் ஆம்புலன்ஸை மட்டும் அனுமதித்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. ஆம்புலன்ஸ்கள் கதிரியக்கம் கொண்டவை என்று கத்திக்கொண்டிருந்தனர்.

அவரைப் பார்த்தேன். வீங்கியிருந்தார். பால் கொடுக்கச் சொன்னார்கள். ஆஸ்பத்திரியில் அவருக்கு பணிவிடை செய்தவர்கள் பல பேர் பின்னாளில் செத்து மடிந்தனர் என்று பிறகு தெரிந்துகொண்டேன். அவரை மாஸ்க்கோவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். மாற்று உடை கொண்டுவரச் சொன்னார்கள்.

அது கதிரியக்கத்திற்காக ஒரு சிறப்பு மருத்துவமனையாக இருந்தது, நீங்கள் சிறப்பு நுழைவு அட்டை இல்லாமல் உள்ளே போக முடியாது. ஆயாவிடம் கொஞ்சம் பணம் கொடுத்தேன். எப்படியோ டாக்ட்ரை பார்த்தேன். பேசிவிட்டு சொன்னார்; “நான் சொல்வதை கவனமாக கேள். அவரிடம் நெருங்கி செல்லாதே. தொடாதே. முத்தமிடாதே. உன்னை உதைத்து வெளியேற்றுவேன்”

ஒவ்வொரு நாளும் என்னவர் உருவம் மாறிக்கொண்டிருந்தார்.
தீக்காயங்கள் மேற்பரப்புக்கு வரத் தொடங்கின. அவரது வாயில், அவரது நாக்கு, அவரது கன்னங்கள் – முதலில் சிறிய காயங்கள் இருந்தன, பின்னர் வளர்ந்தது. கை அடுக்குகளில் வந்தது – வெள்ளை தேகம் … அவரது முகத்தின் நிறம் … அவரது உடல் … நீல, சிவப்பு, சாம்பல்-பழுப்பு….

என்னால் அழ முடியாது. 15 நாள்தான். 30 முறை ரத்தமும் சீழுமாக பேதி கழிந்தார். கை தோல் வெடிக்க தொடங்கியது. கொப்புளங்களால் சூழப்பட்டிருந்தது. தேகம் வீங்கியிருந்தது. கொஞ்சம் தலையை திருப்பினால் ஒரு கற்றை மயிர் தலையணையோடு ஒட்டி பிரிந்தது.

அவர் இறந்து கொண்டிருக்கிறார் என்றேன். “பின் எதை எதிர்பார்க்கிறாய் என்கிறாய் ?” என்றார் செவிலி. “அவர் உடலில் 1600 ராண்டிஜன் கதிரியக்கம் உள்ளது. 400 இருந்தாலே ஆள் காலி. நீ ஒரு சின்ன அணுமின் நிலையத்துக்கருகில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாய்.”

அவர் இறந்தார். பகட்டான உடைகளை வாங்கி கொடுத்தேன். அதை கிழித்து உடலை போர்த்தினார்கள். அப்படியே பாலித்தீனில் கட்டி, மேலும் ஈய பெட்டியில் போதித்து எங்கேயோ தூக்கிச் சென்றனர். எல்லோரும் இறந்ததும் ஆஸ்பத்திரியை இடித்து அதையும் புதைத்தனர்.

— லைட்டுமிலா இஃநாட்டினக்கோ – தீயணைப்பு படை வீரரின் மனைவி சொன்னது..
இடம்: செர்நோபில், ரஷியா, 1986.

ALWAR NARAYANAN

 (Courtesy: Sundar Rajan, Poovulagin Nanbargal)