“அரண்மனை’ போல் ‘தலைநகரம் 2’ படமும் எனக்கு தொடர் படங்களாக அமையும்”: சுந்தர்.சி நம்பிக்கை

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

0a1c

இவ்விழாவினில் ..

தயாரிப்பாளர் SM பிரபாகரன்  பேசியதாவது..

எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது,  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளோம். தொடர்ந்து நாங்கள் இணைந்து நல்ல படைப்புகள் தருவோம், எங்களை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..

எனக்குத் துரை எப்பவும் பிடித்த இயக்குநர். ஒரு ஃப்ரேம் கூட மிஸ் பண்ண முடியாத அளவில் தலைநகரத்தை இயக்கியுள்ளார். தொட்டி ஜெயா படத்தில் வில்லன் இடத்திற்கே சென்று நாயகன் மோதுவான் அந்த மாதிரி காட்சியைத் திரையில் உருவாக்கிய முதல் இயக்குநர் அவர் தான். அவரது கதைகள் என்றுமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் நல்ல மனதுக்காரராக இருக்கிறார். சுந்தர் சியை திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

திரு. ராம்ஜி பேசியதாவது…

நான் ஒரு பதிப்பகம் நடத்துகிறேன். ஒரு படத்திற்குச் சின்ன பைனான்ஸ் பண்ண வேண்டும் கதை கேட்டு முடிவு பண்ண முடியுமா எனக் கேட்டார்கள். நான் கதை கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்தது. பைனான்ஸ்க்கு உள்ளே வரும் போது நிறையப் பேர் எச்சரித்தார்கள். ஆனால் துரை எப்போதுமே முதல் நாளே வட்டி தொகையோடு வந்து நிற்பார். இந்தப்படத்தை அவர்கள் எந்தளவு கஷ்டப்பட்டுச் செய்துள்ளார்கள் என்று தெரியும் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

ஹிந்தி rights  தயாரிப்பாளர் பேசியதாவது..

இந்த படத்தின் 30 நிமிட காட்சிகள் பார்த்தேன் நன்றாக இருந்தது,  உடனே இதன் உரிமையை வாங்கிவிட்டேன். தலை நகரம் கண்டிப்பாக பெரிய வெற்றிப்படமாக இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திரு . J சுரேஷ் பேசியதாவது…

இந்த விழாவிற்கு வர மூன்று காரணம் துரையும் நானும் 20 வருட கால நண்பர்கள், இரண்டாவது இந்தக்கதையை நானும் துரையும் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தது. இந்தக்கதையை அவர் சொன்ன போதே பிரமித்தேன். என்ன மாதிரியான ஒரு நெரேஷன். மூணாவது காரணம் சுந்தர் சி, அவரை அவ்வளவு பிடிக்கும், அவரோடு நான் சேர்ந்து படம் செய்வதாக இருந்தது, அவரை வேஷ்டியில் பார்க்க மம்மூட்டி போலவே உள்ளது.  இந்தப்படத்தின் டிரெய்லர் பாடல்கள் எல்லாம் அட்டகாசமாக உள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது..

மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு இந்த விழாவிற்கு வந்தேன், இயக்குநர் துரை அண்ணன் எனக்கு குரு, அவருடைய நல்ல பழக்கத்தை நான் பின்பற்றி வருகிறேன், சுந்தர் சி சார் உழைப்பு சாதாரணம் இல்லை, 27 வருடம் இந்த துறையில் இருக்கிறார், தலை நகரம் முதல் பாகத்தை விட இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக இருக்கும். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் , தயாரிப்பாளர் பிரபாகரருக்கு வாழ்த்துகள் கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்கு வெற்றியாகத் தான் இருக்கும், அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் சசி  பேசியதாவது..

நண்பன் துரையிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் இருக்க அவருடன் பழகி கதையைப் பகிர்ந்து கொள்வதே காரணம். டிரெய்லரில் ஆக்சன் எல்லா காட்சிகளிலும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய எமோஷன் இருக்கும் எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது. எமோஷன் இல்லாமல் துரை படமே செய்ய மாட்டார் அதனால் தான் 20 வருடங்களுக்கு மேலாகத் திரையில் இருக்கிறார். சுந்தர் சி எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் இயக்குநர் இவரும் சேர்ந்து படம் செய்துள்ளார்கள் கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

நடிகர் பரத் பேசியதாவது…

என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களைத் தந்த இயக்குநர்கள் எல்லாருக்கும் நன்றிகள். அதில் முக்கியமானவர் துரை சார். நேபாளி படத்தில் என்னை அவ்வளவு சிறப்பாக  வடிவமைத்தார். அவர் அதிக நாட்கள் உழைத்த படம் நேபாளி. அவர் வேலையில் டெரராக இருப்பார். அவரின் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால் தான் 20 வருடத்திற்கும் மேலாக இயக்குநராக வலம் வருகிறார். சுந்தர் சி சாரின் படத்தில் நடிக்க ஆசை, இந்த மேடையைப் பயன்படுத்தி இங்கே உங்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொள்கிறேன். சுந்தர் சி சார் அட்டகாசமாக இந்தக்கதையில் பொருந்திப் போகிறார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் பிரேம் பேசியதாவது…

நான் சினிமா கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்தே எனக்குத் துரை சார் பழக்கம்,  அதே போல் இயக்குநர் சுந்தர் சி சாரும் எனக்குப் பழக்கம், இன்று வரை இருவருடனும் தொடர்பில்தான் இருக்கிறேன், இந்த இருவரும் ஒன்றாக இணைந்துள்ளது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது, இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் நன்றி.

நடிகர் வெற்றி பேசியதாவது..

தலைநகரம் முதல் பாகத்தின் வெற்றியைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை, அதே போல் இந்தப் படமும் பெரிய வெற்றியாகத் தான் இருக்கும், நான் சுந்தர் சி சாரின் பெரிய ரசிகன், படத்தில் பணி புரிந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது

சுந்தர் சி சார் பத்தி சொல்ல வேண்டியதே கிடையாது, 2 மணி நேரப்படத்தில் ரசிகனை எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்று தெரிந்த இயக்குநர். நிறையத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவர். தலைநகரம் படத்தை அவர் இயக்கியிருந்தார், இப்போது தலைநகரம் 2 வந்திருப்பது மகிழ்ச்சி. துரை சார் நிறைய வெற்றிப்படங்கள் தந்தவர் இவர்கள் கூட்டணியில் இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் வம்சி பேசியதாவது…

இந்தப்படத்தில் ரோல் கிடைத்ததே ஒரு தனிக்கதை. நீங்கள் முழுசாக சரண்டர் ஆனால் இந்தப்படத்தில் நடிக்கலாம் என்றார் இயக்குநர். நான் நீங்கள் எது சொன்னாலும் ஒகே சார் என்றேன். அவர் அவ்வளவு ஈஸியாக விட மாட்டார். திரும்பத் திரும்ப காட்சிகளை எடுப்பார். தனக்கு என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருப்பார். சுந்தர் சி சாருடன் ஒரு காட்சி தான் நடித்தேன். ஒரு நல்ல அனுபவம் மீண்டும் இவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசை அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் கிச்சா பேசியதாவது…

இயக்குநர்  துரை சாருடன் 10 வருடமாகப் பயணித்துள்ளேன், மூன்று படம் பணி புரிந்துள்ளோம்,  மிக திறமையான இயக்குநர். இந்த படம் மிக நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி,

நடிகர் ஜெஸ்ஸி ஜோஷ் பேசியதாவது…

அனைவருக்கும் எனது நன்றி , எனக்குத் தமிழில் இது முதல் படம் , என்னுடைய புகைப்படத்தை இயக்குநர் துரை சாருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன், எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை அளித்தார். சுந்தர் சி போன்ற ஜாம்பவானுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, தமிழில் இப்படி ஒரு மேடை கிடைத்தது மகிழ்ச்சி. படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி.

டி எஸ் பி வல்லவன் பேசியதாவது…

துரை மிக இனிய நண்பர் முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். பிரபாகருக்கு இந்த பயணம் நல்லதொரு வெற்றிப்பயணமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது..

சசி சார் எப்போதுமே துரை சார் பற்றி நிறையப் பேசுவார் அவர் நல்ல உழைப்பாளி.  துரை சார் பாடலில் ஒரு வாரத்தைக்காக அரை நாள் விவாதிப்பார். அவருடன் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சி. சுந்தர் சி சாருடனும் தொடர்ந்து பயணிக்கிறேன் மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.

நடிகை ஆயிரா பேசியதாவது..

ரொம்ப பெருமையாக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை தந்த துரை சாருக்கு என் நன்றிகள். சுந்தர் சி  சார் படத்தில் நடிக்கும் போது, நிறைய ஆதரவாக இருந்தார். இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் நன்றிகள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இயக்குநர் துரை மிக எமோஷலான மனிதர், எப்போதும் உரிமையோடு பேசுவார். பழனி படத்திற்குப் பிறகு நேபாளியில் பரத்தை வைத்து மிரட்டியிருந்தார். அப்போது தான் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என உணர்ந்தேன். துரை எப்போதும் சினிமாவை மட்டுமே நேசிப்பவர்.  அவர் வெற்றிபெற வேண்டும். சுந்தர் சி இத்தனை காலம் சினிமாவில் தாக்குப்பிடிக்கக் காரணம் அவரின் திட்டமிடல் அபாரமானது, இந்தக்கூட்டணி கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துக்கள்.

நடிகர் சுந்தர் சி பேசியதாவது…

இங்கு வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும், தலைநகரம் டைட்டில் அவரிடம் தான் இருந்தது, அவர் பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2 ஆம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன் ஆனால் துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் இருட்டு படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர்.அவருக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் துரை சார் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் V Z துரை பேசியதாவது…

நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை , என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார் அவருக்கு நன்றி, அவர் பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய தூண் என் தம்பி பிரபாகர் தயாரிப்பாளர், என் மீது நம்பிக்கை வைத்த ராம்ஜி சாருக்கு நன்றி, ஒளிப்பதிவாளர் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோருக்கு எனது மிகப்பெரிய நன்றிகள் , சுந்தர் சி சார் தான் எனக்கு ஆசிரியர், பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன், அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே  நடிக்க ஒப்புக் கொண்டார்.  இயக்குநர் சசி சாருக்கு நன்றி.  நாங்கள் நீண்ட காலமாகப் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் எங்கள் பந்தம் மாறவே இல்லை,  இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும்  நன்றி. படம் நன்றாக உள்ளது அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.