“உன் உயிரை மனுநீதி தின்றது; உடலை மண் தின்னட்டும்! போய் வா, ராம்குமார்…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப்பின் அவரது உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று கூறாய்வு செய்யப்பட்டு, ராம்குமாரின் தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உட்ப்ட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து, ராம்குமார் உடல், அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
மீனாட்சிபுரத்துக்கு வந்துசேர்ந்த ராம்குமாரின் உடலைப் பார்த்து உறவினர்களும், ஊர் மக்களும் கதறி அழுதனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ராம்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அங்கு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் போலீஸ் தலையாகவே காணப்பட்டது. அதை பொருட்படுத்தாத இளைஞர் கூட்டம், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியது. இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் ராம்குமார் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதனையடுத்து அது மீனாட்சிபுரம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் சுவாதியை கொன்றவர்கள் யார்? மீனாட்சிபுரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராம்குமாரை ஏன் கைது செய்தார்கள்? கைது செய்யப்படும்போது அவரது கழுத்து அறுபட்டது எப்படி? புழல் சிறையில் அவர் உயிரிழந்தது எப்படி? அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தால் யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்பட்டிருக்கும்? என்ற மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே ராம்குமாரின் வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டுவிட்டது. இனி என்றைக்கும் இந்த மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படப்போவதே இல்லை.
HERONEWSONLINE.COM: “சூதுக்காரர் தொட்டிலிலே கண்ணும் காதும் கெட்டு நல்ல நீதியது குழந்தை போல உறங்குதம்மா! அதை நினைக்கையிலே மக்கள் மனது கலங்குதம்மா!” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
போய் வா… ராம்குமார்…
உன் உயிரை மனுநீதி தின்றது…
உடலை மண் தின்னட்டும்…
கையாலாகாத அடிமைகளாய் இருளில் நாங்கள்…
GNANABHARATHI CHINNASAMY: சமூகநீதீயும், நீதீயும் மரணித்துவிட்ட. மனுவின் நாட்டில் ஜனித்ததால் உயிர் பறிக்கப்பட்ட கொடுமையின் சாட்சியாக உன் புதைகுழி என்றென்றும் திகழும்..
PRABHU JEEVAN: உன்னை கைது செய்த அந்த இரவு நானும்கூட உன்னை குற்றவாளி என்றே நினைத்தேனடா தம்பி.
உன் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துவிடு.
ANBU DEVENDAR: நீதிபதி: “உன் கடைசி ஆசை என்ன?”
குற்றம் சுமத்தபட்டவர்: “எப்படியாவது உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்துவிடுங்கள்!”
ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சுமத்தபட்ட கல்வி வள்ளல் ராஜா சாகவில்லை.
ஆடிட்டர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஜெயந்திரர் சாகவில்லை.
தினகரன் பேப்பர் கம்பெனி ஊழியர்கள் மூன்று பேர் உயிருடன் கொளுத்தபட்டு இறந்ததற்காக திமுக உடன்பிறப்புகள் சாகவில்லை.
அதிமுகவினரால் மூன்று மாணவிகள் கொளுத்தபட்டு இறந்ததற்கு குற்றம் சாட்டபட்ட யாரும் சாகவில்லை.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட யுவராஜ் சாகவில்லை.
ராம்குமார் மட்டும் தற்கொலை செய்துகொண்டான் !? ஏனென்றால் அவனிடம் மேலே குறிப்பிட்ட வரிசையில் உள்ளவர்களிடம் உள்ள அளவு பணம் இல்லை!
நம் நாட்டில் பணம் இருந்து என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம்…….
நீதித்துறையும் விலைமாதுவும் எப்போதும் பணம் இருப்பவர்களுக்குதான் மரியாதை கொடுக்கும் என்பது தெரிகிறது.
த்தூ…
தம்பி ராமுக்கு என் இதய அஞ்சலி!