திடீர் திருப்பம்: தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!
வருகிற 17, 19 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமனறம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
“தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரி, திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், “உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்நோக்கம் கொண்டவை. எனவே, இது தொடர்பான 3 அரசாணைகளும் ரத்து செய்யப்படுகின்றன” என்று அதிரடியாக கூறியுள்ளது.
.மேலும், “வருகிற டிசம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.