விஜய் ஆண்டனியின்‘தமிழரசன்’ திரைப்படம் ஜூன் 16-ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு OTTதளமான ZEE5, ‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல்யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முன்னணி கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரி. அவரும் அவரது அன்பு மனைவி லீனாவும் (ரம்யா நம்பீசன்) தங்கள் மகன் பிரபாகருக்கு (பிரணவ் மோகன்) இதயம் பலவீனமாக இருப்பதாகவும், எவ்வளவு விரைவில் மாற்று அறுவை சிகிச்சைக்குச் செல்கிறார்களோ அவ்வளவு நல்லது என்பதை அறிந்ததும் அதிர்ச்சியுற்றனர். மகனை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அங்கு இலாபத்தில் அதிக அக்கறை கொண்ட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் கல் நெஞ்சம் கொண்ட மருத்துவர்களால் நிரம்பியுள்ளனர். ஓர் அமைச்சருக்கும் இதய மாற்று சிகிச்சை தேவைப்படுவதால், பிரபாகருக்கு மருத்துவமனை முக்கியத்துவம் அளிக்க மறுக்கிறது. ஆத்திரமடைந்த தமிழரசன் மருத்துவமனையின் இதய நிபுணர் டாக்டர் முருகானந்தத்தை (சுரேஷ் கோபி) பிணைக் கைதியாக பிடித்து, முதலில் தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க அவர்களை வற்புறுத்த முடிவு செய்கிறார். அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியுமா, குறிப்பாக அவரது ஊழல் உயர் அதிகாரி ராணா பிரதாப் சிங் (சோனு சூத்), இவரை வெல்ல விடுவாரா?
தமிழரசன் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு ஆர்டி ராஜசேகர் மற்றும் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர் மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இதில் அறிமுகமாகிறார். ஏப்ரலில் அதன் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, தமிழரசன் திரைப்படம் 16 ஜூன் 2023 அன்று ZEE5-இல் அதன் உலக டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகி வருகிறது.
இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “விஜய் ஆண்டனி மற்றும் தமிழரசன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்கள் என் கருத்துரு மேல் நம்பிக்கை கொண்டு தங்கள் அனைத்து திறமையையும் வெளிக்காட்டினர். எங்களது இந்த உணர்வுப் பூர்வமான திரைப்படம் ZEE5-இல் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை தமிழரசன் இதில் இணைத்துள்ளார், மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும், இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை என்பதால் ஜூன் 16 ஆம் தேதி ZEE5 இல் பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்” என்றார்.
ஜூன் 16, 2023 முதல் ZEE5 இல் ‘தமிழரசன்’ திரைப்படத்தைப் பிரத்தியேகமாகக் காணத் தயாராகுங்கள்.