தமிழினத்தில் எப்போதும் ‘பிரபாகரன்’களும் உண்டு, ‘கருணா’க்களும் உண்டு!

தமிழினத்தில் எப்போதும் –

தமிழ் தேசிய கோரிக்கைக்காக மனஉறுதியுடன் போராடும் ‘மாவீரன் பிரபாகரன்’களும் உண்டு.

அதேநேரத்தில், அக்கோரிக்கைக்காக இணைந்து போராடியபின், பாதியில் துரோகியாகி, அதிகார பீடங்களுடன் கைகோர்த்து, போராட்டக்காரர்கள் மீது பழி சுமத்தி, அவர்களை காட்டிக்கொடுத்து, சாவடித்து, சுயஆதாயம் பெறும் ‘கயவாளி கருணா’க்களும் உண்டு.

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், மேலே உள்ள படத்தில் இருக்கும் ‘கருணா’க்களை அடையாளம் காட்டத் தான்!

சல்லிக்கட்டுக்காக த்ன்னெழுச்சியாக போராடும் மாணவர்களோடு ஆரம்பத்தில் சேர்ந்து இருந்துவிட்டு, பின்னர் நேற்று காலையில் மதுரையில் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து, அளவளாவி, பேரம் முடிந்தபின், இரவு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து, “தேசிய கொடியை ஒருவன் மிதிக்கிறான்’, “திரு.பொன் ராதாகிருஷ்ணன் என்று நான் சொன்னால், ‘திரு சொல்லாதே’ என்று ஒருவன் கத்துகிறான்”, என்கிற ரீதியில் சல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது பழி சுமத்தி, “போராட்டத்தை மாணவர்கள் உடனே கைவிட வேண்டும்” என்று ஓ.பி.எஸ் ஆக, தமிழக போலீசாக விகார முகம் காட்டி முழங்கிய மேலே உள்ள ‘கருணா’க்களை தமிழினம் புறம்தள்ள வேண்டும்; பாடம் புகட்ட வேண்டும்!

அமரகீதன்