சோமாலியா நாடாக மாறப்போகும் தமிழ் திருநாடு…!
1960-ல் சோமாலியா மிகப் பெரிய விவசாய நாடு.
இத்தாலியரின் பிடிக்குள் இருந்த சோமாலியா ஒரு காலத்தில் மிகவும் பசுமை நிறைந்த நாடாக இருந்தது. இத்தாலியரின் பிடிக்குள் சிக்கி ரசாயன கழிவுகளைக் கொட்டும் இடமாகவும், மண்ணில் இருந்து பல ரசாயன பொருள்களை எடுக்கும் நிலமாகவும் சோமாலியா மாறியது. இதனால் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக வளமான விவசாய நிலங்கள் எல்லாம் பாழாகியது.
மோகதிசு, ஜமாமே போன்ற கரையோர நகரங்களுடன் இணைந்த செழிப்பான வயல் நிலங்கள் எல்லாம் இன்று காய்ந்து கட்டந்தரையாக கிடக்கின்றன.
சோமாலியாவின் தெற்கு மாநிலங்கள் இப்படித்தான் மிக வளமான் விவசாய நிலமாக பருவமழை பொழியும் வளமான வயல் பூமியாக இருந்தது. கால்நடை வளர்ப்பில் மிக செழிப்பாக இருந்த நிலங்கள் எல்லாம் மீத்தேன், எரிவாயு இரசாயன கனிம பொருள்கள் அகழ்ந்தெடுக்கும் இடமாக மாறியது. ஆரம்பத்தில் சில வேலைகளுக்கு உள்ளூர் ஆட்கள் பயன்படுத்தப்பட்டு, பின் துரப்பன வேலைகளை இத்தாலிய, மேற்கு ஐரோப்பிய கம்பெனிகள் ஆரம்பித்தன. கணக்கே இல்லாமல் கொள்ளைபோக ஆரம்பித்த கனிம வளங்களால் படிப்படியாக சோமாலியா தனது அழகை இழந்தது .
வடக்கு இத்தாலிய ஆக்கிரமிப்பு ஆதிக்க சக்திகள் மேற்கு உலகுடன் கைகோர்த்து சோமாலிய மண்ணின் கனிம வளத்தை கொள்ளையடிக்க தீவிரவாத சக்திகளை ஊக்குவிக்க, இனக்குழுக்களால் நாடு நாசம் ஆகியது .
ஏறக்குறைய நூறு ஆண்டுகள் பெரும் பொருளாதார, விவசாய உற்பத்தி சரிந்து வீழ்ந்தது. அண்டை நாடுகளுக்கு உணவு கொடுத்த சோமாலியா, ஒருவேளை உணவுக்கு உலகிடம் பிச்சை எடுக்கும் நிலை உருவாகியது .
நூறு ஆண்டுகளுக்குள் அந்த நாடு மிக மோசமான பஞ்சம், போர், அடக்குமுறை பெண்கள் மீதான வன்முறை, தொற்றுநோய் என்று எல்லாமே அதிகரித்து இன்று அந்த நாடு கைவிடப்பட்ட ஒருதேசமாக உள்ளது.
குழந்தைகளை வளர்க்க வழியில்லாத தாய்மார்கள், வேறு வழியின்றி விபச்சாரத்தை வாழ்வாதாரமாக ஏற்று, சமூக சீரழிவுகளை படிப்படியாக சந்தித்து, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் பிறந்து, இறந்து, இன்று மிக குறைவான வருவாய் நாடாக சோமாலியா மாறிவிட்டது.
இன்று உலகில் மிக பெரிய வறுமை நாடாக மாறிவிட்ட சோமாலியாவின் வடக்கு மாநிலங்கள் செழிப்பாக இருக்க, அதற்கு மாறாக தெற்கு மாநிலங்களில் அத்துமீறி செய்யப்படும் ரசாயன அகழ்வுகள் பஞ்சம், வறட்சி என நாட்டையே பாலைவனமாக மாற்றிவிட்டது.
இன்று இந்த நிலைதான் தமிழகத்துக்கு வரப்போகிறது . நாளைய சோமாலியாவாக தமிகத்தை மாற்றிவிட்டு , அதிகார ஆதிக்க வர்க்கம் பணத்தை சுருட்டிக்கொண்டு கிளம்பிவிடும். வருங்கால இளைய சமுதாயம் தமிழரை பார்த்து கைகொட்டி சிரிக்கப் போகிறது .
இந்தியாவின் வளர்ச்சிக்காக தமிழகம் அழியலாம் என்று முடிவு எடுத்து, சில துரோகிகளும், வந்தேறிகளும் கூட்டு களவாணிகளும் ஒன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதே தமிழகத்தில், சிங்கார சென்னையில், பெரும் ஊழல் அரசுகளால் அழகான கூவம் நதி சாக்கடை ஆனது. வளமான பாலாறு, தென்பெண்ணை, காவிரி நதிகளை காய்ந்த மண் அள்ளும் இடமாக மாற்றிவிட்டார்கள் .
தமிழன் இன்னும் விழிக்காது இருந்தால் தமிழகம் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது …
என்ன செய்ய போகிறார்கள் தமிழர்கள்? பணத்துக்காக அன்னை பூமியை அடமானம் வைத்துவிட்டு வடக்கில் அகதிகளாக வாழப் போகிறார்களா ..?
பொன் கார்த்திக்