தமிழ் திரையுலகினர் போராட்டம்: அஜித், அர்ஜூன், பிரகாஷ்ராஜ், திரிஷா உள்ளிட்டோர் புறக்கணிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கிய மவுன போராட்டம் நண்பகல் 1 மணிக்கு முடிவடைந்தது.
இந்தப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சிபி சத்யராஜ், பிரசாந்த், கவுதம் கார்த்திக், விவேக், செந்தில், சிவக்குமார், பொன்வண்ணன், பார்த்திபன், சித்தார்த், ஆனந்தராஜ், மயில்சாமி, ரமேஷ்கண்ணா, நட்டி, தம்பிராமையா, மன்சூர் அலிகான், ஸ்ரீகாந்த்,
இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு, எஸ்பி.முத்துராமன், லிங்குசாமி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பாண்டிராஜ், பூ சசி, மகிழ் திருமேனி, ஆர்.வி.உதயகுமார்,
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ், கவிஞர்கள் வைரமுத்து, பிறைசூடன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகைகள் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார், ரேகா, ஆர்த்தி, லதா, சச்சு, ஸ்ரீபிரியா சி.ஆர்.சரஸ்வதி, கஸ்தூரி உள்ளிட்ட சில நடிகைகளும் கலந்து கொண்டனர்.
ஆனால் அஜித், அர்ஜூன், பிரகாஷ்ராஜ், சிம்பு, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட முன்ணணி நடிகர்களும், திரிஷா, நயன்தாரா, கீர்த்திசுரேஷ், சமந்தா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.