மாதம் ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கோரி ரம்பா மேலும் ஒரு மனு தாக்கல்!

தனது கணவர் தன்னை சித்ரவதை செய்தார் என்றும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை ரம்பா, தனது கணவர் தனக்கும், தனது குழந்தைகளுக்கும் மாதந்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கோரி கூடுதலாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
தன்னை சித்ரவதை செய்த தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற டிசம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்குடன் ரம்பா கூடுதலாக ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், தன் கணவர் மாதாமாதம் தனக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஒரு லட்சமும், ஆக மொத்தம் மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.