“பெரியார் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது எனக்கு!” – ஜெயகாந்தன்

1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம்.நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர்.