டாணாக்காரன் – விமர்சனம்

படம் எடுத்துக்கொண்ட பிரச்சினை, அதனை அலசும் காட்சிகள், படத்தின் உச்சக்காட்சி என அனைத்திலும் ஒரு தரமான திரைக்கதை டாணாக்காரன்.

வெகுமக்களைச் சென்றடைய மெலோ டிராமா காட்சிகள் இருந்தாலும் படக்கதையை அவை பெரிதாக இடையூறு செய்யவில்லை.

காவல்துறை எனும் அமைப்பு பற்றிய இவ்வளவு நேர்த்தியான விமர்சனமும் பார்வையும் கொண்ட ஒருபடம் டாணாக்காரன் போல முழு இந்திய சினிமாவிலும் இதுவரை இல்லை.

ரைட்டர் நீங்கலாக இதுவரை வெளியான காவல்துறை குறித்தப் படங்களில் அதிகபட்ச விமர்சனம் அல்லது குற்றவுணர்வு என்பது அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும்.

இப்படத்தில் இடம்பெறும் உழைப்பு வர்க்கக் காவல்துறைக்கும் அதன் அதிகாரவர்க்கத்திற்கும் இடையிலான முரண் முன்னொருபோதும் சித்தரிக்கப்படாதது.

சமரசமற்ற திரைக்கதை.

விக்ரம் பிரபுவிற்கு ஒரு நடிகராக உண்மையான முதல் திரைப்படம் இதுதான்..

Yamuna Rajendran