”உயர் சிகிச்சைக்காக செல்கிறேன்”: அமெரிக்கா சென்றார் டி.ராஜேந்தர்
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர், உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமெரிக்கா செல்லும்முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் இன்னைக்கு இங்கே வந்து நிக்கறேன்னா, அதுக்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன்.. என் தன்னம்பிக்கையை விட, கடவுள் நம்பிக்கை வென்றுள்ளது.. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு என் மீது மிகுந்த அன்போடு இருப்பது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினும், அவரது மனைவியும் எனது அண்ணியுமான துர்கா ஸ்டாலினும் தான்.. என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து நலம் விசாரித்தனர்.. 2 முறை சந்தித்து பேசினார்.. தம்பி உதயநிதி வரை அத்தனை முறை போன் செய்து அன்பையும் அக்கறையும் காட்டினார்கள்..
ஒன்னே ஒன்னு சொல்லணும்.. என்மீது அன்பும் பாசமும் உருக்கமும் காட்டக்கூடியது கலைஞர் என்றுதான் நினைத்தேன்.. அவர்தான் என் குரு என்று நினைத்தேன்.. அவருக்குபிறகு இன்றைக்கு ஸ்டாலின் ஐயா அவர்கள், அன்பு காட்டியதை பார்க்கும்போது, அவர் மீது இதற்கு முன்பு இருந்ததைவிட, இன்று மரியாதையும் அன்பும் கூடுகிறது.. அவர் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் என்னை நேரில் வந்து பார்த்த திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி..
உயர்சிகிச்சைக்காக இப்போதான் அமெரிக்கா செல்கிறேன்.. என் முகத்தில்தான் வெச்சிருக்கிறேன் தாடி.. எதையுமே வெச்சிருக்க மாட்டேன் மூடி.. ஆனால் அதுக்குள்ள, கதையை விதவிதமாக சொல்லி, யார் யாரோ எப்படி எப்படியோ டைரக்ட் செய்துட்டாங்க.. ஆனால் யார் என்ன செய்தாலும் விதியை, கர்மாவை, ஒன்றும் செய்ய முடியாது.. நான் ஒரு சாதாரண கலைஞன், நான் ஒரு சாதாரண நடிகர்,, நான் சாதாரண ஒரு ஆள்.. என் மேலைஆசை வெச்சு, அன்பு வெச்சு, பாசம் வெச்சு, நான் நல்லா இருக்கணும்னு பலர் செய்த பிரார்த்தனைதான் இன்னைக்கு இங்கே நிக்கறேன்” என்றார்.