பிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு!

0a1dசித்தார்த் முழுநேர அரசியல்வாதியல்ல. அவர் பெரியாரிஸ்டோ, அம்பேத்காரிஸ்டோ, கம்யூனிஸ்டோ அல்ல. அவர் எந்த கட்சியிலும் உறுப்பினர் அல்ல. ஆனாலும், அவர் இந்தியாவில் தற்போதைய பாஜக அரசின் கையாலாகாத நிலையை, மக்கள் விரோத நடவடிக்கையை விமர்சிக்கிறார்.

அதனால் ஆத்திரமடையும் சங்கீகள் அவரை சமூக வலைதளத்தில் தாக்குகிறார்கள். சங்கீகளை எதிர்க்கும் பொருட்டு நம்மில் பல யோக்கிய முகநூல் எழுத்தர்கள் அவரை ஆதரிக்கிறோம்.

இது பிரச்சனையின் அடிப்படையிலான ஆதரவு. நாளை இதே சித்தார்த், மோடிக்கு இணக்கமாக நிலை எடுத்தால் தூக்கிப்போட்டு மிதிப்போம். அது வேறு.

ஆனால், இந்த குறைந்தபட்ச புரிதல் அற்ற அரசியல் ஞானிகள், அறிவு ஜீவிகள், நம் போன்றோரின் சித்தார்த் ஆதரவு நிலைபாட்டை விமர்சிக்கிறார்கள்.

0a1e

அன்னா ஹாசாரேவை ஆதரித்தார், 10% இடஒதுக்கீடு , நீட்டில் அவர் நிலைபாடு என்ன என கேள்வி எழுப்புகிறார்கள். இந்த இரண்டில் நீட்டால் அனிதா கொல்லப்பட்டபோது, நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

அன்னா ஹசாரேவை ஆதரித்த காரணத்தால் சித்தார்த் நிராகரிக்கப்பட வேண்டுமென்றால், ஹாசாரேவை ஆதரித்த மம்தாவை தூக்கி வைத்து கொண்டாடுவது ஏன்?

Prathaban Jayaraman