சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ‘STRI சினிமாஸ்’ பெருமையுடன் அறிவித்துள்ளது!
பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது.
அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி – சில்க் ஸ்மிதாவைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.