காதல் கலந்த காமெடி படம்: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்!

ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘கோச்சடையான்’. முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் ‘கோச்சடையான்’ என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த். இதற்காக முழுக்க காதல் கலந்த காமெடி கதை ஒன்றை அவர் எழுதி முடித்திருக்கிறார். தற்போது அப்படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்களுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதன் படக்குழு முழுமையாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார்.