ஜார்ஜ், அமல்ராஜ், ஆதிக்கு சில அற்புத யோசனைகள்!
போராட்டத்தை முன்னிட்டு பல அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அப்படி சிறப்பான அறிவிக்கைகள் வெளியிட்ட சிலருக்கு இனி வரும் அறிவிக்கைகள் இன்னும் சிறப்பாக இருக்க சில யோசனைகள்.
- சென்னை போலீஸ் கமிஷனருக்கான யோசனைகள்.
– போராட்டத்தில் நிழலுலக தாதாக்கள் ஊடுருவியதால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது.
– போராட்டத்தில் சீன மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் ரகசியமாக சந்திக்கவிருக்கும் தகவல் கிடைத்ததால்தான் கூட்டத்தை கலைக்க வேண்டியிருந்தது.
– போராட்டத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, முப்பத்து இரண்டு காக்கைகள் எழுந்து நிற்காததால்தான் தடியடி நடத்த வேண்டி இருந்தது.
– போராட்டத்தில் சிலர் தனி சமோசா, தனி வாட்டர் பாட்டில் போன்ற பிரிவினைவாத பேச்சை முன்னெடுத்ததால்தான் நாங்கள் தலையிட வேண்டியிருந்தது.
-போராட்டத்தில் பலர் கறுப்பு அரைஞாண் கொடி போட்டு வந்திருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்ததன் பேரில்தான் நடவடிக்கை எடுத்தோம்.
- கோவை கமிஷனருக்கான யோசனைகள்:
-தோழா தோழா பாடல் ஒளிபரப்பானால் உங்கள் வீட்டு டிவியை அணைத்து விடுங்கள்.
-என் உயிர் தோழன் படத்தை பற்றி உங்கள் குழந்தைகள் விசாரித்தால் அது ஒரு பிட்டு படம் என சொல்லி கலவரப்படுத்துங்கள்.
-மகன் முன்னால் எவரிடமாவது சண்டை போட நேர்ந்தால், தோழர், தோழர் என திட்டி அந்த வார்த்தை ஒரு கெட்ட வார்த்தை என்ற பிம்பத்தை உருவாக்குங்கள்.
-ஆங்கிலம் பேசினால் கூட, கோபத்தில் ‘வாட் தெ ஃபக்’ என தன்னிச்சையாக வரும்போது ‘வாட் தெ தோழர்’ என சொல்லி பழகுங்கள்.
-போராட்டத்தில் அதிமுக, திமுக, மதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசவிரோத அமைப்புகளுக்கு என்ன வேலை?
- ஆதிக்கு சில யோசனைகள்.
ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தில் பலர் சம்பந்தமில்லாமல் மாடுகளை பற்றி பேசுகிறார்கள். ஒருவர் என்னவென்றால் இஸ்லாமியர் கொடுத்த பிரியாணியில் உப்பு இல்லை என்கிறார், இஸ்லாமியரோ நாங்கள் கொடுத்தது பிரியாணியே அல்ல என பிரச்சினை செய்கிறார். திடீரென ஒரு பத்து பேர், ஆண்கள் மாதிரி இருந்தனர். வந்து மோடி இஸ் எ ஸ்மார்ட் பெர்சன் என குழப்பத்தை உருவாக்குகின்றனர். அதனால்தான் நான் இந்த போராட்டத்தில் இருந்து விலகிவிட்டேன்.
RAJASANGEETHAN JOHN