‘தமிழகத்தின் கடைசி பாஜக எம்.பி. பொன் ராதாவுக்கு வாழ்த்துக்கள்!”

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் நரேந்திர மோடி பிடிவாதமாக கூறியிருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில:

வாசுகி பாஸ்கர்: “வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது என்னால் உதவி செய்ய இயலாது” – மோடி.

இதை whatsappல அனுப்பி இருக்கலாமே! ஒரு மனுஷனை இம்மாம் தூரம் பிசினஸ் கிளாஸ்ல வர வச்சியா சொல்வாங்க!

# #

விஜயன்.சி: இனி நம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தேவையில்லை….

ஓட்டுக்காக இங்கே எவன் கால் வைத்தாலும் உதைங்க.

# #

Markandan Muthusamy: தமிழ்நாட்டில் இன்னும் சல்லிவேர்கூட பிடிக்கல.அதற்குள் அவனுங்களுக்கு இத்தனை மமதை என்றால் அதிகாரம் அவனுங்க கையில் கிடைத்தது என்றால் இந்த நிலம் பாழ்படும்.

# #

Mani Dhanuskodi: தமிழகத்தின் கடைசி பாஜக எம்.பி. திரு. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்!

# #

Jayachandra Hashmi:  “நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது” – மோடி

உம்ம மேலயும் வழக்கு இருந்துச்சுல? அப்பறம் என்ன மயித்துக்கு எலெக்சன்ல நின்னீரு??

# #

சேவிரா: “அவசர சட்டம் கொண்டு வர முடியாது” – மத்திய அரசு.

“போராட்டத்தை நிறுத்த முடியாது”- மாணவர்கள் (அலங்காநல்லூர்)

# #

EEVERAA: கையாலாகா முதல்வர்,

கை விரித்த பிரதமர், 

கைதுக்கஞ்சா இளைஞர், 

கைவிட மாட்டார் தமிழர்…

இந்தியா,

கிழியப் போகும்

தொந்தியா?

# #

Vetri Vel: படித்ததில் வலித்தது…

மசூதிகளை இடிப்பதற்கு தீர்ப்பு தேவையில்லை!
காளைகளை தழுவ மட்டுமே தீர்ப்பு தேவை!