இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்மிருதி இரானிக்கே!
நேத்து ஸ்மிருதி இரானி கண்ணுல ஜலத்த வச்சுட்டா. பார்லிமெண்டே கலங்கிடுத்து. “நான் என் கடமையை தான் செய்தேன். ஹைதராபாத்திலிருந்து வந்த கடிதத்துக்கு பதில்தான் போட்டேன். அந்த கொழந்த தற்கொலை பண்ணியதற்கு தனிப்பட்ட முறையில் என்னை தாக்கறாங்க.” உருக்கமான பேச்சு.
லட்சக்கணக்கான மாணவர்களின் ஸ்காலர்ஷிப் கட் பண்ணி, அவங்க வயித்துல அடிச்சதுக்கு, கடந்த மூணு மாசமா உங்க அலுவலகத்த முற்றுகையிட்டு தெருவுல இறங்கி மாணவர்கள் போராடி வராங்க. ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல மேடம்கிட்ட.
ஆனா, எங்கோ ஒரு மூலையில இருக்குற ஹைதராபாத்துல மாணவர்கள் ஒரு அறையில ஒரு படம் போடறதும், பீப் சாப்டறதும் அமைச்சருக்கு தேசிய பிரச்சனை. உடனே பதில் போடுவாங்க. நெருக்கடி கொடுத்து கொல்லுவாங்க.
என்ன உலக மகா நடிப்பு…! ஊடகங்கள் இரானியின் கண்ணீரில் மூழ்கி தத்தளிக்குது…!
இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்மிருதி இரானிக்கே…!
–– அணங்கு பதிப்பகம்
# # #
இந்தியர்கள் சீரியல்கள் பார்த்தே மொன்னையாகி விட்டார்கள் என்பதற்கு உதாரணம் நேற்றைய ஸ்மிருதி இரானியின் உரை தான். கையில் பேப்பர் பேப்பராக வைத்துக்கொண்டு அவர் கூறிய பொய்களுக்கு அளவேயில்லை. பொய்களை உரக்க கூறினால் அதை கேள்வி கேட்காமல் உண்மை என்று நம்பும் பழக்கம் நமக்கு இயல்பிலேயே இருக்கிறது. நாம்தான் அர்னாப் கோயபல்ஸ் ஸ்வாமியின் வளர்ப்புகள் ஆயிற்றே!
ஸ்மிருதி இரானி பேசியது: “ரோஹித் வேமுலா தற்கொலை செய்துகொண்டபோது காவல்துறை மற்றும் மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு தான் அவர்கள் பரிசோதனை செய்தார்கள்.”
உண்மை என்ன: ரோஹித் வேமுலா NRS விடுதியில் இறந்து கிடந்ததை பார்ததவுடன் நிஷா உடனே மருத்துவ மையத்தில் இருந்த CMOவை அழைக்கிறார். மருத்துவர் ராஜஸ்ரீ உடனே அங்கு வருகிறார். அவரை பரிசோதிக்கிறார். அவரது இறப்பை அறிவிக்கிறார். அந்தநேரம் தெலுங்கானா காவல்துறையினர் உடன் இருந்தனர்.
ஸ்மிருதி இரானி பேசியது: “நான் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களை பரிசீலிப்பவள். ஹைதராபாத் பல்கலைக்கழக விவகாரத்திலும் நான் அவ்வாறே செய்தேன்.”
உண்மை என்ன: காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்த ராவ் அவர்களின் கடிதத்தில், பல்கலைக்கழகத்தில் அதிகரித்துவரும் தலித்களின் தற்கொலைகள் குறித்து அவர் எச்சரித்திருந்தார். ஆனால், பாஜக எம்.பி. தத்தாத்ரேயா எழுதிய கடிதத்தில், அம்பேத்கார் மாணவர் இயக்கம் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக இருந்த கருத்துக்குத் தான் அமைச்சர் ஸ்மிருதி முக்கியத்துவம் கொடுதார். அதன் அடிப்படையில் தான் ரோஹித் வேமுலாவை நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறார்.
ஸ்மிருதி இரானி பேசியது: “JNUவில் மாணவர்கள் மகிசாசுரரை வழிபட்டார்கள்.”
உண்மை என்ன: இந்தியாவில் பல பகுதிகளில் மகிசாசுர வழிபாடு நடைபெறுகிறது. துர்க்கா சிவப்பு தோலுடன் சித்தரிக்கப்படுகிறார். மகிசாசுரர் கருப்புத் தோலுடன் காட்சியளிக்கிறார். இது இந்தியாவில் உள்ள ஆரிய – திராவிட நிலைகளை, இரு வழிபாட்டு முறைகளை, நம் வேற்றுமையைக் காட்டுகிறது. கர்நாடகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மைசூர் என்பது மகிசாசுர் என்கிற வார்த்தையின் மருவிய வடிவம் தான்.
இன்று மாலைக்குள் மொத்த உரையையும் கட்டுடைக்க வேண்டும். சீரியல் பார்க்கும் இந்தியர்களுக்கு உண்மையை புரியவைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இவெங்களும் புரியாத மாதிரியே நடிக்கிறாயிங்கப்பா…!
–– முத்து கிருஷ்ணன்