’பொன்னியின் செல்வன் – 1’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களுக்கு ஒன்றிய அரசின் 6 விருதுகள்!

ஒன்றிய அரசின் 70-வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டுக்கான இந்த விருதுகளில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதினை ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்துக்காக நித்யா மேன்னும், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்துக்காக மானசி பரேக்கும் பகிர்ந்து கொண்டுள்ளனர். சிறந்த நடனத்துக்கான விருதினை ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற “மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே…” பாடலுக்காக ஜானி மாஸ்டர் மற்றும் சதிஷ் கிருஷ்ணன் வென்றுள்ளனர்.

ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு விருதுகள் சிறந்த திரை கலைஞர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு இன்று (ஆக.16) வெளியாகி உள்ளது. அதன் விவரம்:

  • சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
  • சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
  • சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
  • சிறந்த சவுண்ட் டிசைன் – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
  • சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
  • சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
  • சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் மற்றும் சதிஷ் கிருஷ்ணன் மேகம் கருக்காத பாடல் (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
  • சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
  • சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
  • சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
  • சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
  • சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம் – மலையாளம்)
  • சிறந்த பின்னணி பாடகி – பாம்பே ஜெய்ரஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா – மலையாளம்)
  • சிறந்த பின்னணி பாடகர் – ஆர்ஜித் சிங் (பிரம்மஸ்திரா – இந்தி)
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மாளிகாபுரம் – மலையாளம்)