‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ 20ஆம் தேதி வெளியாகிறது!

சென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். பெருகிவரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாரம்பரியமிக்க பாலியல் தொழிலும் மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், பாலியல் தொழில் செய்வதற்கு சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கோரிக்கையை முன்வைத்தும் எடுக்கப்பட்டுள்ள ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மகிமா எனும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் சான்ட்ரா எமி, தன்னிடம் வந்துசென்ற ஐந்து வாடிக்கையாளர்களைப் பற்றி எழுத்தாளர் யுரேகாவிடம் பகிர்ந்துகொள்கிறார். வந்துசெல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் வெறும் உடல் தேவைக்காக மட்டும் வரவில்லை என்றும், அவர்களுக்கு ஒரு மனநல மருத்துவராக தான் செயல்பட்டதாகவும் கூறும் விதமாய் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சான்ட்ரா எமி, யுரேகா ஆகியோருடன் பஜார் பாபு, ரோஜா மலர், காமாட்சி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதிஷ் குமார் தயாரிக்க, யுரேகா எழுதி இயக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவு -மகேஷ்வரன்

இசை – சிவசரவணன், அனிஷ்யுவானி

படத்தொகுப்பு – வில்சி

கலை – கமல்

நடனம் – எஸ்.எல்.பாலாஜி

மக்கள் தொடர்பு – நிகில்