ரஜினி ட்வீட் பற்றி சீமான்: “போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!”
இந்திய ஒன்றிய சங்கியரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராடுகிற மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும், அது தமக்கு வேதனை அளிப்பதாகவும் கொடூர வலதுசாரி கருத்தியலாளரும், கர்நாடக மராட்டியருமான நடிகர் ரஜினி கூறியுள்ளார். இதை ஆட்சேபித்து நாம் தமிழர் கட்சி த்லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது தான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!”